புதன், 22 அக்டோபர், 2014

ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மரணம்

உதிர்ப்பூக்கள்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் அசோக்குமார். இவருக்கு கடந்த ஜுன் மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அசோக்குமாரை டைரக்டர்கள் மகேந்திரன், பாண்டியராஜன் ஆகியோர் நேரில் சென்று அசோக்குமார் உடல்நிலை குறித்து விசாரித்தனர். பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். எனினும் வீடு திரும்பிய அவருக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வீட்டில் வைத்தே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. 70 வயதாகும் அசோக்குமார், உதிரிப்பூக்கள், ஜானி ஆகிய நெஞ்சத்தை கிள்ளாதே உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக