நடிகை பூஜா திருமணத்துக்கு தயாராகிறார். டிசம்பர் மாதம் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் (நவம்பர்) நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது. மாப்பிள்ளை பெயர் தீபக் சண்முகநாதன். இவர் இலங்கையை சேர்ந்தவர். மாடலிங் மற்றும் பேஷன் டிசைனராக இருக்கிறார். இது காதல் திருமணம் ஆகும். பூஜா, ஜெ.ஜெ. படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அட்டகாசம், உள்ளம் கேட்குமே, ஜித்தன், தம்பி, நான் கடவுள், விடியும் முன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ‘நான் கடவுள்’ படத்தில் பூஜா கேரக்டர் பேசப்பட்டது.maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக