ஞாயிறு, 5 அக்டோபர், 2014

தேவகெளடா :ஜெயலலிதா விசாரணையை தமிழகத்திற்கு மாற்ற வேண்டும் ! டீலுக்கு எவ்வளவு ரேட்டோ ?

ஜெயலலிதா மீதான வழக்கு விசாரணையை தமிழகத்திற்கு மாற்ற வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகெளடா கூறியுள்ளார். பெங்களூருவில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பு வழங்கவும், அவரை பார்க்க வரும் தொண்டர்களால் நடத்தப்படும் போராட்டங்களை தடுக்கவும் கர்நாடக போலீசார் பயன்படுத்தப்படுகின்றனர். ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தப்போது, அவர் மீதான வழக்கு விசாரணை வேறு மாநிலத்தில் நடைபெற் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதில் நியாயமும் உள்ளது. தற்போது வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகி, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் வழக்கு விசாரணைக்கும், கர்நாடகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
ஜெயலலிதாவை சிறையில் அடைத்து வைத்துள்ளதால், கர்நாடக போலீசாருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாது 2 மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை பெங்களூரு சிறையிலிருந்து சென்னைக்கு மாற்ற வேண்டும். அவர் மீதான வழக்கு விசாரணையும் தமிழகத்திற்கு மாற்ற வேண்டும். ஜெயலலிதா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிச்சுமையை கர்நாடகம் சுமக்க முடியாது என்றார்.nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக