ஞாயிறு, 19 அக்டோபர், 2014

உள்துறை இணை அமைச்சர் : இனவெறி தாக்குதல்களை மன்னிக்க முடியாது ! கடும்விளவு சந்திக்க நேரிடும் !

தொடரும் தாக்குதல் சம்பவங்கள்! மத்திய அரசு பொறுத்துக்கொள்ளாது என கிரண் ரெஜ்ஜூ எச்சரிக்கை! ;இந்தியாவில் இனவெறித் தாக்குதல்கள், வன்முறை சம்பவங்களை மத்திய அரசு பொறுத்துக்கொள்ளாது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரெஜ்ஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.;அரியானா மாநிலம் குர்கானில் வடகிழக்கு மாநிலமான நாகலாந்தை சேர்ந்த இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை குர்கான் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கிரண் ரெஜ்ஜூ ஆலோசனை மேற்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா ஜனநாயக அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ள நாடு. இங்கு தேசிய ஒருமைப்பாடு மற்றும் பொதுமக்களின் ஒற்றுமை மீது எவ்வித தாக்குதல் நடந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக இன ரீதியான தாக்குதல், சம்பவங்கள் எந்த வழியில் நிகழ்த்தப்பட்டாலும், அவற்றை அரசு ஏற்றுக் கொள்ளாது என்றார். nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக