வெள்ளி, 3 அக்டோபர், 2014

தினமலரின் திமுக பற்றிய கவலை : தீர்ப்புக்கு கருத்து சொல்ல அச்சம்: வீரியம் இழக்கிறதா தி.மு.க.,?

ஜெயலலிதாவுக்கு தெரிஞ்சதெல்லாம் ஒன்னு அனுதாப அரசியல், இல்லைன்னா அராஜக அரசியல்.. இது ரெண்டுக்குமே அவர் யூஸ் பண்ணிக்கிறது அவர் கட்சி அப்பாவி, அடிமைத்தன சொம்பனுங்களை தான். நல்லா உசுப்பேத்தி உசுப்பேத்தி அவனுங்களை புண்ணாக்கி விட்டுடுவாங்க மம்மிஜி. ஜெயிலுக்கு போனது ஊழல் பண்ணி கொள்ளை அடிச்சி சொத்து சேர்த்த குத்தத்துக்காக.. ஆனா அவங்க சொமபனுங்க என்னமோ மம்மிஜி 'மக்களுக்காக போராட்டம் பண்ணி' ஜெயிலுக்கு போயிட்டா மாதிரி கதறிக்கிட்டு இருக்கானுங்க. அந்தளவுக்கு அவனுங்க மூளையை மம்மிஜி மழுங்க வைச்சிருக்காங்க. இதையெல்லாம் தெரிஞ்சி தான், ஜெயலலிதாவோட அனுதாபத்துக்கோ, அராஜகத்துக்கோ இடம் கொடுத்திட கூடாதுன்னு திமுகவும் அதன் தலைவர்களும் அமைதியா இருக்காங்க. தவிர எப்ப பேசணும், எங்க பேசணும்னு தெரியாதா கருணாநிதிக்கு? இதையெல்லாம் புரிஞ்சிக்கிற அளவுக்கு புத்தி அதிமுக அடிமை சொம்பனுங்களுக்கு இருக்கோ இல்லையோ, ஆனா மம்மிஜிக்கு நல்லாவே புரியும்..

 தினமலர்.: சென்னை: ஜெயலலிதா மீது போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., தன் தரப்பு கருத்தை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருப்பது, கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது, வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக, வழக்கு போடப்பட்டு, அவருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்திருக்கிறது. வழக்கை முதன் முதலில் தாக்கல் செய்தது, பா.ஜ.,வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி. என்றாலும், வழக்கை அப்போதைய தி.மு.க., அரசுதான் எடுத்து நடத்தியது.
பின்னர், 2001ல் அ.தி.மு.க., மீண்டும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், தமிழகத்தில் நடந்து வந்த, இந்த வழக்கில், அரசு தரப்பும், குற்றவாளிகள் தரப்பும் ஒன்றாகி விட்டதாக, குற்றச்சாட்டு எழுந்ததையொட்டி, தி.மு.க., தரப்பில், வழக்கை, தமிழகத்தில் நடத்தக்கூடாது; வேறு மாநிலத்தில் வைத்துத்தான் நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், சொத்துக் குவிப்பு வழக்கை, கர்நாடகாவுக்கு மாற்றியது. அந்த அடிப்படையில், கர்நாடக அரசு, பெங்களூருவில், சிறப்பு நீதிமன்றம் அமைத்து, வழக்கை நடத்தியது.
அந்த வழக்கில் அரசு தரப்பு ஒரு பக்கமும், குற்றவாளிகள் தரப்பு ஒரு பக்கமும் இருக்க, வழக்கு எந்த கட்டத்திலும் நீர்த்துப் போகக்கூடாது என்பதற்காக, தி.மு.க.,வும் தன் தரப்பில், வழக்கறிஞர்களை நியமித்து, வழக்கு விசாரணையை தொடர்ந்து கவனித்து வந்தது. கோர்ட்டு விசாரணைக்கு தேவையானதையெல்லாம் செய்தும் கொடுத்தது. இந்நிலையில், கடந்த 27ம் தேதி, இந்த வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. ஜெயலலிதாவுடன் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அந்த அடிப்படையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில், நால்வரும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தண்டனைக்கு எதிராக, அ.தி.மு.க., தரப்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்த தீர்ப்பை, சதி செய்து வழங்கப்பட்ட தீர்ப்பு என, அ.தி.மு.க.,வினர் கடுமையாக விமர்சனம் செய்வதோடு, கருணாநிதிதான், சதி செய்து, இப்படியொரு தீர்ப்பு வழங்கப்படுவதற்கு காரணமானவர் என சொல்லி, அவருடைய உருவ பொம்மையை எரித்தும், பாடை கட்டி அந்த உருவ பொம்மையை எடுத்துச் சென்று எரித்தும், எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். உச்சபட்சமாக, கருணாநிதி வீட்டுக்கே வந்து, கல்லெறிந்து கலாட்டா செய்வதும், தடுக்கப் போனவர்களோடு, ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, கருணாநிதியும், ஸ்டாலினும் தூண்டி விட்டு, அ.தி.மு.க.,வினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் வழக்குப் போட்டிருக்கின்றனர். ஆனால், இத்தனைக்குப் பின்னும், தி.மு.க., தரப்பு அமைதியாக இருப்பதுதான், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தலைமை மீது, கடும் அதிருப்தி கொள்ள வைத்திருக்கிறது.
இது குறித்து, கட்சியின் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: ஜெயலலிதா மீது போடப்பட்டது, சொத்துக் குவிப்பு வழக்குதான் என்றாலும், இது ஒரு ஊழல் வழக்குதான். அப்படிப்பட்ட மிக முக்கியமான வழக்கில்தான், அவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார். இந்த தண்டனைக்கு எதிராக, அ.தி.மு.க.,வினர், பல்வேறு ரூபங்களில் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அதில், மக்களும் தி.மு.க.,வினரும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்புக் கூட ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், இந்த வழக்கின் தீர்ப்பில் இருக்கும் நியாயத்தைக்கூட, தி.மு.க., தரப்பு, வெளிப்படையாக சொல்ல மறுப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை. தி.மு.க.,வும் ஊழல் புரிந்திருக்கிறது என, பூமராங் ஆகும் என நினைத்தால், இப்போது மட்டும் தி.மு.க.,வை விமர்சிக்காமலா இருக்கின்றனர்? விமர்சனத்துக்காக தி.மு.க., அச்சப்படுகிறது என்பதை ஏற்க முடியவில்லை.
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டது சரிதான் என, மக்களிடம் சொன்னால்,அது ஜெயலலிதாவுக்கு பரிதாபத்தை ஏற்படுத்திக் கொடுத்து விடும் என அஞ்சினால்,அன்றைக்கே,வழக்கு விசாரணையில் இருந்து விலகி, நின்றிருக்க வேண்டும். வழக்கை கடைசி வரையில் நடத்தி விட்டு, தீர்ப்பின் நியாயத்தைக் கூட சொல்லாமல் இருப்பது எப்படி? பா.ஜ.,வின் தமிழிசை சவுந்திரராஜனும், எச். ராஜாவும், பொன் ராதாகிருஷ்ணனும், தே.மு.தி.க.,வின் விஜயகாந்தும் வெளிப்படுத்திய கருத்துக்களைக்கூட சொல்ல முடியாமலா போய்விட்டது தி.மு.க.,வுக்கு?
கிட்டதட்ட ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சி என, பறைசாற்றிக் கொள்ளும் தி.மு.க., தலைவர், இத்தனை பெரிய படைக்கு தலைவர் என்ற நிலையிலும், இந்த விஷயத்தில் அமைதியாக கருத்து சொல்லாமல் இருப்பதுதானே, நியாயமில்லாத செயல். எம்.ஜி.ஆர்., என்ற மிகப் பெரிய சக்தியையும் மிக சாதாரணமாக எதிர்கொண்ட இயக்கம், இன்றைக்கு, தீர்ப்புக்கு கருத்துச் சொல்லக் கூட, தயக்கம் காட்டும் அளவுக்கு சுருங்கிவிட்டதா? இல்லை, கட்சியினர் மனதில் தெம்பு குறைந்து விட்டதா?
சில காலங்களுக்கு முன்னால், கருணாநிதியை விமர்சிப்பவர்களை எதிர்க்கும் துணிச்சல் படைத்தவர்களாக, மாவட்ட செயலர்கள் இருந்தனர். ஆனால், இன்றைக்கு கட்சித் தலைமையே, தீர்ப்பு பற்றி கருத்து சொல்ல தயங்கும்போது, கருணாநிதியை விமர்சிப்பவர்கள் குறித்து, தற்போதைய மாவட்ட செயலர்கள் மட்டும் பெரிதாக என்ன செய்து விட முடியும். இதே நிலை நீடித்தால், ஒரு வீரியமான கட்சி என்ற நிலையை இழக்கும். இவ்வாறு தெரிவித்தனர். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக