செவ்வாய், 7 அக்டோபர், 2014

Bangladesh ஷேக் ஹசீனாவை கொல்ல தீவிரவாதிகள் திட்டம்: இந்திய உளவுத்துறை தகவல்

வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனாவை கொல்ல தீவிரவாதிகள் திட்டம் தீட்டியதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
மே. வங்காள மாநிலம் பர்ட்வான் என்ற இடத்தில் உள்ள கக்ராகார் பகுதியில் கடந்த 2–ந் தேதி சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் வெடிகுண்டு தயாரித்த ஷமீம் ஷகில் அகமது மற்றும் ஸ்வொபன் மாண்டல் ஆகியோர் பலியாகினர்.
அப்துல் ஹகீம் என்பவர் காயம் அடைந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் ஜமாத்–உல்– முஜாகிதீன் வங்காள தேசம் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.
எனவே, போலீசாரும், உளவுத்துறையும் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். குண்டு வெடிப்பில் உயிரிழந்த ஷகில் அகமது மனைவி ரஜிரா பீபி, ஹசன் சஹெப் மனைவி மைனா பீபி ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் லேத் எந்திரங்களில் ராக்கெட் லாஞ்சர்கள் தயாரிக்க ஏற்பாடு செய்தது தெரியவந்தது. அதற்கான டிசைன்களை செல்போன்களில் இண்டர் நெட் மூலம் பதிவிறக்கம் செய்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
ஜமாத்–உல்–முஜாகிதீன் வங்காளதேசத்தை இந்த தீவிரவாதிகளுக்கு தடை செய்யப்பட்ட ஜமாத்–இ– இஸ்லாமி என்ற அமைப்புடன் தொடர்பு உள்ளது.
இவர்கள் டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் கொல்கத்தாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்தனர்.
மேலும், வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனாவையும் கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்த அதிர்ச்சி தகவலும் தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக