புதன், 15 அக்டோபர், 2014

AVM 70 Year ! ஏ.வி.எம் தலைமுறைகள் தாண்டி ராஜநடையுடன்!

அன்று தனது எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ஏ.வி.எம் தயாரிப்பு நிறுவனம். ஏ.வி.எம் நிறுவனத்தின் வாசலில் எப்போதும் சுற்றிக்கொண்டிருக்கும் உலக உருண்டையை சென்னைக்கு வந்து காணாமல் சென்றவர் சிலராகத்தான் இருக்கக்கூடும். அல்லது இதைக் காண்பதற்காகவே சென்னைக்கு வந்தவர் பலராக இருக்கக்கூடும். திரு. AV மெய்யப்பன் அவர்கள் 1934-ஆம் ஆண்டிலிருந்து திரைப்படத்துறையில் இருந்தாலும் 1945 அக்டோபர் 14-ஆம் தேதி தான் முதன்முதலில் AVM PRODUCTIONS என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். சென்னை, மைலாப்பூரில் 60, தெற்கு தெரு, சாந்தோம் பகுதியில் வாடகைக் கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டAVM PRODUCTIONS 14.10.2014-ல் 70-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
சென்னையில் ஆரம்பிக்க நினைத்த AVM Studios மின்சாரத் தேவை காரணமாக காரைக்குடியில் இயங்க ஆரம்பித்தது.
முதலில் ‘நாம் இருவர்’ படத்தை 14.01.1947-ல் வெளியிட்டது. பாரதியார் பாடல்கள் காட்சிகளாக எடுக்கப்பட்ட படம் இது. இதற்காக பாரதியார் பாடல்களின் உரிமையைப் பெற்று பின் நாட்டுடமையாக்கப்பட்டது வரலாறு. 1948-ல் ‘வேதாள உலகம்’ படத்தை வெளியிட்டவுடன் Studios-ஐ சென்னைக்கு மாற்றினார்கள்.

1948 முதல் இன்று வரை AVM Studios காலமாற்றங்களுக்கு ஏற்ப தன்னையும் புதுப்பித்து நிலைத்து நின்று இந்தியாவின் பழமையான  Studios என்ற புகழைப் பெற்றுள்ளது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி, பெங்காலி, சிங்கள மொழிகளிலும் புகழ்பெற்ற படங்களை தயாரித்துள்ள இந்நிறுவனம் 175 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளது.>இந்த நிறுவனம் தயாரித்த நாம் இருவர், வாழ்க்கை(3 மொழிகளில்), சபாபதி, ஸ்ரீவள்ளி, வேதாள உலகம் போன்ற படங்கள் திரு. ஏவி.மெய்யப்பன் அவர்களே இயக்கியது. ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த ‘ஹம்பஞ்சி ஏக் டால்கே’ இந்திபடம் 1957-ஆம் ஆண்டு சிறந்த குழந்தைகளுக்கான படமாக, பிரதமர் விருதான தங்க மெடல் பெற்று நேருவின் பாராட்டுக்களைப் பெற்றது. ராஜ்கபூர் - நர்கீஸ் நடித்த சோரி சோரி சிறந்த இசையமைப்பாளருக்கான(ஷங்கர் ஜெய்ஷ்கின்) தேசிய விருதை பெற்றது. அந்த நாள், தெய்வப் பிறவி, பாவ மன்னிப்பு, சர்வர் சுந்தரம் ஆகியவை சிறந்த படங்களுக்கான மத்திய அரசின் சான்றிதழ் பெற்றது. 

அன்னை, நானும் ஒரு பெண், குழந்தையும் தெய்வமும், ராமு போன்ற படங்கள் சிறந்த படத்திற்கான வெற்றிப்பதக்கத்தை பெற்றது. பக்த பிரகலாதா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் எடுக்கப்பட்ட படம். சிவாஜியின் 125-வது படமான உயர்ந்த மனிதன் P.சுசிலாவிற்கு(பால் போலவே) சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும், சிறந்த படத்திற்கான தமிழ்நாடு அரசு விருதும் பெற்றது. 

சம்சாரம் அது மின்சாரம் படம் சிறந்த ஜனரஞ்சக படத்திற்கான மத்திய அரசின் தங்கப் பதக்கத்தை பெற்றது. மின்சாரக் கனவு திரைப்படம் சிறந்த நடனம்(பிரபுதேவா), சிறந்த பின்னணி பாடகர்-பாடகி (SPB- சித்ரா) என பல விருதுகளை பெற்றது. இப்படி தேசிய விருது பெற்ற படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. 


தொழில்நுட்பத்தில் பின்னணி பாடுவது, பின்னணிக்குரல் பதிவு போன்றவற்றை திரையுலகில் அறிமுகப்படுத்தியதே ஏ.வி.எம் தான். 1937-ல் பின்னணி பாடும் முறை நாந்தகுமாரில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரபல பாடகி லலிதா வெங்கட்ராமன் பின்னணி பாடியிருக்கிறார்.  1938-ல் ஹரிசாந்திரா என்ற கன்னடப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இதுவே இந்தியாவின் முதல் டப்பிங் படமாகும். டப்பிங் முறை, மின்னணி பாடும் முறை ஆகியவற்றை இந்திய சினிமாவிற்கே அறிமுகப்படுத்தியது ஏவிஎம் தான் என்பது உண்மை. 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், S.S.ராஜேந்திரன், T.R.மகாலிங்கம், கமலஹாசன், சிவகுமார், நாகேஷ்வர ராவ், வி.கே.ராமசாமி, விஜயகுமாரி, பண்டரி பாய், வைஜெயந்திமாலா உள்ளிட்ட நடிப்புக் கலைஞர்களையும், A.T.கிருஷ்ணசாம்மி, எம்.வி.ராமன், ப.நீலகண்டன், k..ஷங்கர், எஸ்.பி.முத்துராமன், இராமநாராயணன், உள்ளிட்ட இயக்குனர்களையும் அறிமுகப்படுத்திய பெருமை ஏ.வி.எம்-ற்கு உண்டு.


சிவாஜி நடித்தார். அவர் மகன் பிரபு நடித்தார். சிவக்குமார் நடித்தார். அவரது மகன் சூர்யா நடித்தார். குமாரி ருக்மணி நடித்தார். அவரது மகள் லட்சுமி, அவர் மகள் ஐஸ்வர்யா என இப்படி தலைமுறைகளைத் தாண்டி நடிக்க வைத்த நிறுவனம் ஏ.வி.எம்.

ஏ.வி.எம்-ன் தொண்டினை பாராட்டி மத்திய அரசு 2006-ல் தபால் தலையை வெளியிட்டது. தென்னிந்திய வர்த்தகசபை ஏ.வி.எம்.மின் சிலையை தங்கள் வளாகத்தில் திறந்து வைத்து பாராட்டினர். இத்தனை சிறப்புகளோடு ஏ.வி.எம் நிறுவனம் 70-வது ஆண்டிலும் தன் கலை உலக பயணத்தை நான்காம் தலைமுறையுடன் தொடர்கிறது. 

பழைய படங்களின் கேலரி : 
nakkheeran.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக