வியாழன், 30 அக்டோபர், 2014

ஜெயா தரப்பு சுப்ரமணியம் சாமிக்கு எதிராக தொடர்ந்த 5 அவதூறு வழக்குகளிற்குக்கும் உச்ச நீதிமன்றம் தடை

சென்னை: ஜெ., முதல்வர் பதவி இழந்து நிற்பதற்கு காரணமான சுப்பிரமணியசாமி தொடர்ந்து வழக்குகள் அடிப்படையில் விரட்டுகிறார். அவரை அரசியல் ரீதியாகவும், கோர்ட் மூலமாகவும் பல்வேறு செக் வைத்து முன்னேறி செல்கிறார் சாமி. சொத்துக்குவிப்பு வழக்கை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவரே பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமிதான். இதனால் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று , 22 நாட்கள் பெங்களூருவில் சிறைவாசம் அநுபவித்தார் ஜெ., . தீர்ப்பு வருவதற்கு முன்னர் ஜெ., முதல்வராக இருந்த போது சாமி மீது தமிழக அரசு சார்பில் 5 அவதூறு வழக்கு போடப்பட்டது. ஜெயாவுக்கு ஜெயாவே வைத்துகொள்ளும் ஆப்புக்களில் இந்த அவதூறு வழக்கு வியாதியும் ஒன்று ,தனிகாட்டு ராணியாக இருக்க ஆசைபட்டு அது கிடைந்தே விட்டது ,
மீனவர்கள் விவகாரம் மற்றும் இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட படகுகள் சசிக்கு சொந்தமானது என்ற கருத்தை வெளியிட்டமைக்கும் அவதூறு வழக்கு பாய்ந்தது. சமூக வலைத்தளத்திலும் ஜெ., குறித்து சாமி விமர்சித்திருந்தார். சாமியின் பேட்டியை பிரசுரித்த தினமலர் உள்பட சில நாளிதழ்கள் மீதும் அவதூறு வழக்கு தொடரப்பட்டன.

கருத்துரிமைக்கும் பங்கம்: இந்நிலையில் இந்த வழக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்த வழக்கு தகுதி இல்லாதது என்றும், அடிப்படை பேச்சுரிமைக்கும், கருத்துரிமைக்கும் பங்கம் ஏற்படும் விதமாக காரணமற்ற வகையில் இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோர்ட்டில் ஆஜராக வேண்டியதில்லை என்றும் உத்தரவிட வேண்டும் என கோரினார்.

நீதிபதிகள் தீபக்மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோரை கொண்ட பெஞ்ச் மனுவை விசாரித்தது. சாமியின் வாதுரையை கேட்ட நீதிபதிகள் , ஜெ., தரப்பில் தொடர்ந்து அனைத்து 5 அவதூறு வழக்கிற்கும் தடை விதித்தனர். மேலும் விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும், நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக