புதன், 29 அக்டோபர், 2014

142 நாடுகளில் பெண் உரிமை பேணுவதில் இலங்கை 79 வது சீனா 87 வது இந்தியா114 வது ......

பெண்களுக்கு சம உரிமை வழங்கும் 142 நாடுகளின் பட்டியலில் இந்தியா 114-ஆவது இடத்தில் பின் தங்கியுள்ளது.
உலக பொருளாதார அமைப்பு (டபிள்யூ.இ.எஃப்.) ஆண்டுதோறும் வெளியிடும் இந்தப் பட்டியலில், கடந்த ஆண்டு இந்தியா 101-ஆவது இடத்தில் இருந்தது.
இந்த முறை, 13 இடங்கள் சரிந்து இந்த இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.
பெண்களுக்கான பொருளாதார உரிமைகள், கல்வி, சுகாதாரம், உயிர் வாழ்தல் ஆகிய பிரிவுகளில் சராசரிக்கும் குறைவான புள்ளிகளை இந்தியா பெற்றுள்ளதாக டபிள்யூ.இ.எஃப் மதிப்பீட்டு அறிக்கை தெரிவிக்கிறது.
அந்த அறிக்கையின்படி, பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தல், பெண்கள் வருவாய், கல்வியறிவு, ஆண் - பெண் பிறப்பு விகிதம் ஆகியவற்றில் மிக மோசமான 20 நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது.
எனினும், அரசியல் ரீதியாக பெண்களுக்கு உரிமைகள் வழங்கும் மிகச் சிறந்த 20 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு 141-ஆவது இடம்: இந்தப் பட்டியலில், கடைசி இடத்தில் யேமன் நாடு உள்ளது.
அதற்கு முன்னதாக, 141-ஆவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது.
இலங்கை, சீனா: பட்டியலில் இலங்கை 79-ஆவது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், 87-ஆவது இடத்தில் சீனா உள்ளது.
பெண்களுக்கு அளிக்கப்படும் உரிமைகள் குறித்து நாடு வாரியாக ஆய்வுகள் மேற்கொண்டு, 2006-ஆம் ஆண்டு முதல் டபிள்யூ.இ.எஃப். பட்டியல் வெளியிட்டு வருகிறது. dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக