வெள்ளி, 24 அக்டோபர், 2014

10 லட்சம் வெளிநாட்டு பறவைகள் ஓடிசா சிலிகா ஏரிக்கு வருகை

ஒரிசா: சைபீரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து10,000க்கும் மேற்பட்ட பறவைகள் இடம்பெயர்ந்து தங்கள் குளிர்காலத்தை அனுபவிக்க ஒரிசாவின்  சிலிக்கா ஏரிக்கு வந்துள்ளன. முதலில் குறைவான பறவைகள் வந்தன. பின்னர் பறவையின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. சிலிக்கா ஏரி 1,100 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய உவர் நீர் ஏரி ஆகும். அது பறவை மற்றும் சுற்றுலா பயணிகள் கவரும் இடமாக கருதப்படுகிறது. சுமார் 10 லட்சம் புலம்பெயர் பறவைகள் அக்டோபர் மாதம் ஏரிக்கு வருகை தரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குளிர்காலம் முடிந்து மார்ச் மாதத்தில் பறவைகள் மீண்டும் தங்கள் நாடுகளுக்கு திரும்பி சென்று விடும் என்று பறவை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். dinakaran .com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக