நாட்டில் தொடர்ந்து நடந்துவரும் கொலை, கற்பழிப்பு, கடத்தல் போன்ற கொடூர சம்பவங்கள் பெரும்பாலும் பணத்தை மட்டுமே முன்னிருத்தி நடைபெறுவதில்லை. ஏதோ ஓர் உடல் சார்ந்த இன்பத்திற்காக நடைபெறும் இந்த கொடூரங்களை குறைக்க, சிவப்பு விளக்குப் பகுதிகள் அரசினால் அங்கீகரிக்கப்பட்டு நடத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது சிவப்பு எனக்கு பிடிக்கும்.சிவப்பு எனக்கு பிடிக்கும் திரைப்படத்தின் இயக்குனர் யுரேகா ஒரு எழுத்தாளராக இத்திரைப்படத்தின் கதையை நகர்த்திச் செல்கிறார். சிவப்பு எனக்கு பிடிக்கும் என்ற தலைப்பில் நாவல் எழுதுவதற்காக பாலியல் தொழிலாளியான மகிமாவை சந்திக்கிறார். மகிமாவின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை தனது நாவலுக்காக பதிவுசெய்கிறார்.சிவப்பு விளக்குப் பகுதியை அங்கீகரிக்க வேண்டும் என்ற எழுத்தாளனது கோரிக்கையைக் கேட்டு முதலில் சிரிக்கும் மகிமா உட்பட படம் பார்ப்பவர்கள் அனைவருமே படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் கண்ணீர் சிந்துவது உறுதி.
’சிவப்பு
என்பது நிறமல்ல’ என்ற முதல் பாடலிலேயே படம் பார்ப்பவர்களை திரைக்கதையின்
வளையத்திற்குள் இழுத்துவிடும் இயக்குனர் தொடர்ந்து அவர்களை அங்கேயே
நிறுத்திவைப்பது படத்தின் பலம். பள்ளி மாணவனிலிருந்து சமுதாயத்தில்
பெரும்புள்ளிகளாக உலவிவரும் அனைவருக்கும் பாலியல் தொழிலாளியின் தேவை
இருக்கிறது என்பதை அழுந்தச் சொல்கிறது சிவப்பு எனக்கு பிடிக்கும்.
பாலியல்
தொழிலாளியின் துன்பங்கள், திருநங்கைகளாக பிறந்தவர்கள் சமுதாயத்தில்
அனுபவிக்கும் இன்னல்கள் என களத்தில் இறங்கி இயக்குனர் சேகரித்த அனைத்து
தகவல்களையும் படத்தின் சரியான இடங்களில் பொருத்தியுள்ளார்.
பாலியல்
தொழிலில் ஈடுபடுபவர்களும், பாலியல் தொழிலாளிகளை நாடுபவர்களும் இருக்க,
நாட்டை ஆளும் அரசாங்கம் இவர்களுக்கென தனி இடம் ஒதுக்கிக் கொடுத்து
கட்டுப்படுத்தமுடியாமல் பெருகிவரும் கற்பழிப்புச் சம்பவங்களை குறைக்கலாமே?
என்பது படத்தின் கரு. பாலியல் தொழிலாளியின் கதையாக இருந்தாலும் முகம்
சுளிக்கும் காட்சிகளே இல்லாமல் சொல்ல வந்த கருத்தை மட்டும் ’நச்’ என
சொல்லியிருக்கும் இயக்குனருக்கு சபாஷ்.
சிவப்பு எனக்கு பிடிக்கும் - எல்லோருக்கும் பிடிக்கும்! nakkheeran in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக