புதன், 3 செப்டம்பர், 2014

பொன்.ராதாகிருஷ்ணன்: கேரள இந்துக்கள் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் தமிழகத்துடன் குமரி இணைந்திருக்காது!

கேரள இந்துக்கள் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் தமிழகத்துடன் குமரி இணைந்திருக்காது! பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு எதிர்ப்பு! இந்து சமயம் ஒற்றுமையுடன் இருந்திருந்தால், கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்திருக்காது என்று கேரளாவில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்த கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைக்கக் கோரி போராட்டம் வெடித்தது. அப்பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டதை தொடர்ந்து, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மொழிப்போர் தியாகிகள் என கௌரவிக்கப்பட்டனர்.இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், இந்து சமயம் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்திருக்காது என்று கூறினார். இவரது பேச்சு மொழிப்போர் தியாகிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  பாஜகவின் ஒவ்வொரு அழுக்கும் வெளியே வரத்தொடங்கி உள்ளது, சு சாமியின் சனி பிடிச்ச நாக்கால வந்த  நாறல் பேச்சுக்கு அடுத்து கேரளாவுக்கு சப்போர்ட் பண்ணும் பொன் ராதாகிருஷ்ணன் . ரொம்ப சீக்கிரமா சுய ரூபத்தை காட்டுராய்ங்க


மொழிப்போர் தியாகிகள் சங்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மார்த்தாண்டம், எஸ்டிமங்காடு போன்ற இடங்களில் துப்பாக்கி சூட்டுகளுக்கும், போலீசாரின் அத்துமீறிலில் உயிரிழந்த எண்ணற்ற தியாகிகளின் உணர்ச்சி பிளம்பில் தமிழர்கள் விடுதலை பெற்றிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இப்படிப்பட்ட கருத்து மக்கள் மத்தியில் மத ரீதியாக குழப்பம் விளைவிக்கும் செயல். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதாரணி கூறுகையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழகத்தில் குமரியை இணைக்குமாறு இந்துக்கள், கிறிஸ்வர்கள், இஸ்லாமியர்கள் என்று பாகுபாடு பார்க்காமல் அனைவரும் போராடி இணைத்தார்கள். ஆகவே எந்த கருத்தை கூறினாலும் மத ரீதியிலான கருத்தாக இல்லாமல் இருந்தால் நன்மையாக இருக்கும் என்றார். 

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் கூறுகையில், பெருவாரியான தமிழர்கள் உள்ள குமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இருப்பதுதான் நியாயம் என்று அன்று முடிவெடுக்கப்பட்டது. இந்தநிலையில் குமரி மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர், அந்த மக்களுக்கே துரோகம் செய்யும் வகையிலே குமரி மாவட்டம் கேரளத்தோடு இணைக்க வேண்டும் என்ற கருத்தை, கேரளத்தில் இன்று வைக்கப்படுகின்ற அந்த மக்களின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது கண்டனத்துக்கு உரியது. மந்திரியாக தேர்ந்தெடுத்த குமரி மக்களுக்கு விசுவாசமாக இல்லாமல், கேரளாவுக்கு விசுவாசமாக இருக்கிறார் என்றார். 
nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக