செவ்வாய், 16 செப்டம்பர், 2014

ஷங்கரின் ஐ படவிழா ! ரஜினி டென்ஷன் : அரங்கை விட்டு வெளியேறிய அர்னால்டு!

விக்ரம் நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ஷங்கர் இயக்கிய ’ஐ’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று,  நேரு உள் விளையாட்டரங்கில்  நடைபெற்றது.இந்த படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.   இதற்கு முன்பு இந்த நிறுவனம் தயாரித்த ‘தசாவதாரம்’ பட விழாவில் நடிகர் ஜாக்கிசான் பங்கேற்றார்.  ஐ பட விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பங்கேற்றார்.   நடிகர் ரஜினிகாந்தும் இவ்விழாவில் பங்கேற்றார்.விழா குறித்த நேரத்திற்கு தொடங்கவில்லை.  இதனால் சில கசப்பான நிகழ்வுகள் நடந்துவிட்டது.  விழாவே இரவு 8 மணிக்குத்தான் தொடங்கியது.   ரஜினி வந்து தனிமையில் 20 நிமிடங்கள் காத்திருந்த பின்னர்தான் படத்தின் இயக்குநர் ஷங்கர் வந்தார். இதனால் செம டென்ஷனில் இருந்தார் ரஜினி.விக்ரமுக்கு மேக்கப் போடுவதில் காலதாமதம் ஆனதால், அதை சமாளிக்க, ரஜினியிடம் மைக் கொடுத்து நிகழ்ச்சியை பற்றி பேசச்சொன்னார் சின்மயி.  ஏற்கனவே கடுப்பில் இருந்த ரஜினி, கடைசியா பேசிக்குறேன் என்று சொல்லிவிட்டார்.  அடுத்து அர்னால்டுவிடம் கொடுத்து பேசச் சொன்னபோது, ரசிகர்கள்தான் முக்கியம் என்று அரங்கம் அதிர உற்சாகமாய் குரல் கொடுத்துக்கொ ண்டிருந்த ரசிகர்களை பார்த்து சொல்லிவிட்டு முடித்துக்கொண்டார்.நிகழ்ச்சி ஆரம்பித்ததே வெகு தாமதமாக, இதில் வேறு ஆடல், பாடல் என்று நிகழ்ச்சி இழுத்துக் கொண்டே போனது.  இதனால்தானோ என்னவோ தெரியவில்லை.  யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று மேடையேறி மைக் பிடித்தார் அர்னால்டு.  நீங்க இப்போது பேசக்கூடாது. கடைசியாகத்தான் பேசணும் என்று ஒருவர் வந்து தடுக்க,  ஏன் நான் இப்போது பேசக்கூடாது.  நான் இப்போதுதான் பேசுவேன் என்று சொல்லிவிட்டு, பேசினார்.  பேசி முடித்ததும் அவர் அரங்கை விட்டு வெளியேறிவிட்டார்.அதன் பின்னர் பாடல்களை வெளியிட்டார்கள்.   அர்னால்டு வருவார் என்று ரஜினி, ஷங்கர், ரகுமான், விக்ரம் உட்பட பலரும் எதிர்பார்த்தார்கள்.  ஆனால் அவர் வரவில்லை.  10 மணியை கடந்துவிட்டதால், ரஜினி பேச்சைக்கூட யாரும் சரியாக கவனிக்கவில்லை.  அரங்கிற்கு வெளியே பெய்யெனப்பெய்த மழையை எப்படி சமாளித்துக்கொண்டு போவது என்ற நினைப்பிலேயே இருந்தார்கள் ரசிகர்கள்.nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக