சனி, 13 செப்டம்பர், 2014

கலைஞர் : தி.மு.க.,வை யாராலும்வீழ்த்த முடியாது !

சென்னை:'குடும்பமாக, கட்சியை நடத்தி வருகிறோம். யார் கலகம் மூட்டினாலும், தி.மு.க.,வை வீழ்த்த முடியாது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.தென் சென்னை மாவட்ட தி.மு.க., செயலர் ஜெ.அன்பழகன் இல்லத் திருமண விழாவில், கருணாநிதி பேசியதாவது:தி.மு.க.,வை குடும்பமாக, நடத்திக் கொண்டிருக்கிறோம். அரசியல் கட்சியாகவோ அல்லது சமுதாய இயக்கமாகவோ மாத்திரமல்ல; சமுதாயப் புரட்சியை உருவாக்குகிற ஒரு இயக்கமாக, தி.மு.க.,வை இன்றைக்கும் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்தக் கட்சியில், யார் என்ன சொன்ன போதிலும், யார் கலகமூட்டி, தங்களுடைய திருவிளையாடல்களை நடத்திய போதிலும், இந்த கட்சியை வீழ்த்துவதற்கு யாரும் இன்னும் பிறக்கவில்லை.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக