புதன், 17 செப்டம்பர், 2014

கூடங்குளம் உதயகுமார் நேபாளம் செல்ல முயற்சிக்கையில் பிடிபட்டார் !

திருநெல்வேலி:வெளிநாடு செல்ல முயற்சித்த, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார், டில்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து தீவிரமாக போராடி வரும் உதயகுமார், நேற்று, டில்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். நேபாளம் செல்வதற்கான பயண சீட்டுடன், குடியுரிமை பிரிவு அதிகாரிகள் முன் ஆஜரானார். அவரை அதிகாரிகள் மடக்கினர். நேபாள நாட்டு தலைநகர் காத்மாண்டுவில் நடக்கும் மனித உரிமைகள் கருத்தரங்கில் பங்கேற்க செல்வதாக அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.இருப்பினும், அவரை அதிகாரிகள், பயணம் செய்ய அனுமதிக்க மறுத்து விட்டனர். அவர், வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதபடி அவரது பாஸ்போர்ட்டை தமிழக போலீசார் முடக்கியுள்ளனர். இந்தியாவில் இருந்து, நேபாள நாட்டிற்கு செல்ல பாஸ்போர்ட் தேவையில்லை என்பதால் அவர் நேபாளம் செல்ல முயற்சித்ததாக தெரிகிறது.  இன்னமும் நிறைய மனிதர்கள் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் நல்ல பணம் சம்பாதித்தது மட்டும் இல்லாமல் மக்களிடம் செல்வாக்கு உள்ளவர் போல வலம் வருகின்றனர்.
நெல்லையில் விசாரணை :
டில்லி குடியுரிமை பிரிவு அதிகாரிகள் நெல்லை மாவட்ட எஸ்.பி., நரேந்திர நாயரிடம், உதயகுமார் மீது போடப்பட்ட வழக்குகள் குறித்து விவரம் கேட்டனர். இதுகுறித்து நெல்லை போலீஸ் தரப்பில் கேட்ட போது, 'அவர் மீது வழக்குகள் இருப்பதால், வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. அவர், வெளிநாடு செல்வதற்கு எந்த அனுமதி கடிதமும், நெல்லை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து வழங்கப்படவில்லை. எனவே அங்கிருந்து திருப்பி அனுப்பப்படுவார்' என்றனர்.
தப்ப முயற்சியா?அரசுக்கு எதிராக செயல்பட்ட சில அமைப்புகளை சேர்ந்தவர்கள், டில்லியில் இருந்து நேபாளம் சென்று அங்கிருந்து, வெளிநாடுகளுக்கு சென்ற சம்பவங்கள் இதற்கு முன்பு நடந்துள்ளன. எனவே, உதயகுமார், நேபாளத்திற்கு செல்வதன் மூலம், அங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தாரா எனவும் சந்தேகங்கள் எழுப்பி உள்ளன. தற்போது, போலீ சார் அவருக்கு எந்த கெடுபிடியும் தருவதில்லை. தி.மு.க., உள்ளிட்ட எல்லா எதிர்க்கட்சிகளுமே அவருக்கு ஆதரவாகி விட்டன.எனவே, அவர் வெளிநாடு செல்லும் திட்டம் எதுவும் வைத்திருக்க வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.'எக்காரணத்தை கொண்டும் அரசியலுக்கு செல்ல மாட்டேன்; தேர்தலில் போட்டியிட மாட்டேன்' என கூறி வந்த உதயகுமார், தேர்தல் பாதையை தேர்ந்தெடுத்தார். இதன் மூலம், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அவர் மீதான நுாற்றுக்கணக்கான வழக்குகளை வாபஸ் பெறச் செய்தனர். ஆனால், தற்போதும், அவர் மீது தேசவிரோத வழக்குகள், குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.துவக்கத்தில் இருந்தே, 'வெளிநாடுகளில் இருந்து நிதி பெறவில்லை' என, உதயகுமார் கூறி வந்தார். முந்தைய மத்திய அரசில், அமைச்சராக இருந்த நாராயணசாமி குற்றம் சாட்டிய பிறகு, 'சாக்கர்' பள்ளி வாகனம் வெளிநாட்டு நிதியில் இருந்து வாங்கியதாக ஒப்புக்கொண்டார்.தொடர்ந்து, வெளிநாட்டில் இருந்து, அவருக்கு நிதி வந்தது குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசாரும், அவர் மீது வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.

அமெரிக்க உதவியுடன் வளர்ந்த உதயகுமார்:கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பறக்கை அருகே, இசங்கைமணி தெருவை சேர்ந்தவர் உதயகுமார். நாகர்கோவில் கல்லுாரியில், இளங்கலை கணிதம், கேரள பல்கலையில் முதுகலை ஆங்கிலமும் கற்றவர். எத்தியோப்பியா நாட்டில், ஆங்கில ஆசிரியராக, 1981- 87ல், பணியாற்றியுள்ளார்.அப்போதே, தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். அமெரிக்காவில், 1989 முதல், 2001 வரை, 'சர்வதேச சமாதான கல்வி' படிப்பை,
Advertisement
அமெரிக்காவின் உள்துறை செலவில் படித்தார்.பின், ஹவாய் பல்கலைக்கழகத்தில், அரசியல் அறிவியலில் பிஎச்.டி., பட்டம் பெற்றார். தொடர்ந்து, மினசோட்டா பல்கலையில் பணியாற்றினார்.தொண்டு நிறுவனம் கடந்த, 2001க்கு பிறகு சொந்த ஊர் வந்தவர், 'சாக்கர்' என்ற தொண்டு நிறுவனத்தைதுவக்கினார். இந்த நிறுவனம் மூலம், ஒரு பள்ளியை நடத்தி வருகிறார்.தொண்டு நிறுவனம் மூலம், வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றுள்ளார். ஏற்கனவே, தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு, அமெரிக்காவின் உள்துறை அமைப்பின் நட்பு ஆகியவற்றை பயன்படுத்தி, ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் இயங்கும் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை, 2009களில் கையில் எடுத்தார்.அவ்வப்போது கூடங்குளத்தில் உண்ணாவிரதம், போராட்டம் நடத்திவிட்டு ஊருக்கு கிளம்பி விடுவார். அணு உலைக்கு எதிரான மக்களை திரட்டும் பணியில், சில தொண்டு நிறுவனங்கள் கை கொடுத்ததால், இடிந்தகரையை அதற்கான தளமாக பயன்படுத்திக் கொண்டார்.

300 வழக்குகள் :கூடங்குளத்தில் போராட்டங்களுக்கு தடை வந்ததால், இடிந்தகரையில், போராட்ட பந்தல் உருவானது. 2014 லோக்சபா தேர்தல் வரையிலும் கூட, உதயகுமார் உள்ளிட்டவர்கள் மீது, 300க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக