செவ்வாய், 9 செப்டம்பர், 2014

தோழியை திருமணம் செய்கிறார் தோழி நவரதினலோவா !

செக்கசுகோவக்கியாவில் பிறந்து அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் குடியேறி வசித்து வருபவர் முன்னாள் டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை மார்டினா நவரத்திலோவா. ஓரின சேர்க்கையாளரான (லெஸ்பியன்) நவரத்திலோவா, ஜூடி நெல்சன் என்ற பெண்ணுடன் 7 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து விட்டு கடந்த 1991–ம் ஆண்டில் பிரிந்தார். தற்போது 57 வயதான நவரத்திலோவா, 42 வயதான ரஷிய முன்னாள் அழகியும், தொழில் அதிபருமான ஜூலியா லெமிகோவாவுடன் கடந்த 6 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருகிறார். இவர்களது நிச்சயதார்த்தம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் அரை இறுதி ஆட்டத்தின் போது ஸ்டேடியத்தில் நடந்தது. இது அங்குள்ள திரையில் காட்டப்பட்டது.
அப்போது ரசிகர்கள் கரவொலி எழுப்பினார்கள். என்னை திருமணம் செய்ய விருப்பமா? என்று நவரத்திலோவா விடுத்த வேண்டுகோளை ஜூலியா ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து நவரத்திலோவா, ஜூலியாவுக்கு வைர மோதிரம் அணிவித்தார்.

புளோரிடாவில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி கிடையாது. இதனால் இருவரும் மியாமியில் தங்கள் திருமணத்தை விரைவில் நடத்தலாம் என்று முடிவு செய்து இருக்கின்றனர் maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக