சனி, 20 செப்டம்பர், 2014

இன்டர்நெட் உலகில் இருந்து விலக ரஷ்யா முடிவு ! நடக்கிற காரியமா ?

மேற்கத்திய நாடுகள், தன்னை உளவு பார்க்க கூடிய ஆபத்து  இருப்பதாக அஞ்சும் ரஷ்யா, உலகளாவிய இன்டர்நெட் சேவைகளிலிருந்து, விடுவித்துக்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளதாக தெரிகிறது.  அமெரிக்க தொழில்நுட்பத்தில் உருவான இன்டர்நெட்டை பயன்படுத்துவதன் மூலம், அமெரிக்கா, தனது நாட்டின் ரகசியங்களை உளவு பார்க்க வாய்ப்புள்ள சந்தேகப்படும் ரஷ்யா, தன்னை உலகளாவிய, இன்டர்நெட்டிலிருந்து விடுவித்துக்கொண்டு தனித்துசெயல்பட முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக