ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

பிலாவல் பூட்டோவுக்கு முழு காஷ்மீரும் வேணுமாம் ?

இஸ்லாமாபாத்:''இந்தியா வசம் உள்ள காஷ்மீரின் அனைத்து பகுதிகளையும், பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும். நாட்டின் மற்ற பகுதிகளைப் போல், காஷ்மீரும், பாகிஸ்தானுக்கு சொந்தமானதே. அதை மீட்டு, பாகிஸ்தானுடன் இணைப்பதே என் லட்சியம்,'' என, பாக், முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் மகன் பிலாவல் கூறியுள்ளார். இதுவரை, பாகிஸ்தானைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மட்டுமே, ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் திமிராக பேசி வந்த நிலையில், இளம் தலைமுறையும் இவ்வாறு பேசியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானில், முகமது அலி ஜின்னா முதல், பர்வேஷ் முஷாரப் வரை, பாக்., அரசியலில் முக்கிய பொறுப்பு வகித்த தலைவர்கள் அனைவருமே, காஷ்மீரை குறிவைத்தே அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். அதனால், அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்த வண்ணம் உள்ளது.  தம்பி  தப்புத்தப்பா யோசிக்குது. இப்படிப்பேசினாத்தான் அதிரடியாக பிரபலம் ஆகலாம்ங்கற நெனப்பு. பொழப்ப கெடுத்திடும் தம்பி. உயிரு முக்கியம். பயங்கரவாதிகளுக்கு தன் ஆளுன்னும் தெரியாது, பிரத்தியான்னும் புரியாது.உன் அம்மா ரொம்ப நல்லவிங்க அவுக பேரை கெடுக்காதே தம்பி
அடிக்கடி ஊடுருவல்கள், சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுதல், இந்திய ராணுவ வீரர்களின் தலையைத் துண்டித்து கொக்கரித்தல் என, பாக்., ராணுவத்தினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய பிரதமர், நவாசும் இந்தப் பிரச்னையில் தங்கள் முன்னோரையே முன்னோடியாக எண்ணி செயல்பட்டு வருகிறார்.தலைமுறை தலைமுறையாக பாக்., அரசியல்வாதிகள், காஷ்மீரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில், பாக்., முன்னாள் பிரதமர், பெனசிர் புட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இளம் தலைவருமான, பிலாவல் புட்டோ சர்தாரி, 25, தீவிர அரசியலில் களம் இறங்கியுள்ளார். வரும், 2018ல் நடக்கவுள்ள, பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் அவர், மக்களை துாண்டும் வகையிலும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசி வருகிறார். இந்தியாவை தாக்கியும், இந்தியாவுக்கு எதிரான பாக்., ராணுவத்தின் செயல்பாடுகளை பாராட்டியும் பேசி வருகிறார்.இதன் உச்சக்கட்டமாக, இந்தி யாவுக்கு சொந்தமான, 'காஷ்மீரின் அனைத்து பகுதிகளும், பாகிஸ்தானுக்கே சொந்தம்' என கருத்து கூறி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

முல்தானில், கட்சித் தொண்டர்களிடையே பேசிய பிலாவல், ''தற்போது இந்தியா வசம் உள்ள காஷ்மீரின் அனைத்து பகுதிகளும், பாகிஸ்தானுக்கு சொந்தமானவை. அவற்றை மீட்கும் வரை நான் போராடுவேன். காஷ்மீரின் அனைத்து பகுதிகளையும், பாகிஸ்தானுடன் இணைப்பதே என் லட்சியம். இதிலிருந்து ஒருபோதும் பின் வாங்க மாட்டேன்,'' என்றார்.

கோரிக்கை:

பிலாவலின் இந்த பேச்சுக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 'வரலாறு தெரியாத பிலாவலின் பேச்சு, சிறுபிள்ளைத்தனமானது, அரசியல் அனுபவம் அற்ற அவரின் பேச்சுக்களால், இரு நாட்டு உறவுகள் பாதிக்கப்படும்' என, அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.'மத்திய அரசு விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். நாட்டின் பிற பகுதியில் வசிக்கும் மக்களைப் போலவே காஷ்மீரில் வசிப்பவர்களும் நிம்மதியுடனும், முழு அதிகாரத்துடனும் வாழ வகை செய்ய வேண்டும்' என்பதே, ஒட்டு மொத்த இந்தியர்களின் விருப்பமாகவும், கோரிக்கையாகவும் உள்ளது.

சுதந்திரத்திற்குப் பின்னும் தொடரும் கதை:

நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ள, ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பிரிட்டிஷ் ஆட்சி நடந்த காலத்தில், ராஜா ஹரி சிங்கின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. இந்தியா, பாக்., இரு நாடுகளும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றபோதும், காஷ்மீரில் மன்னர் ஆட்சியே அமலில் இருந்தது. அப்போது, காஷ்மீரின் பல பகுதிகளிலும், பாக்., படையினர் அத்து மீறி நுழைந்து, அதை பாகிஸ்தானுடன் இணைக்குமாறு நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து, மன்னர் ஹரி சிங்கின் வேண்டுகோளுக்கிணங்க, 1947 அக்டோபரில் இந்திய ராணுவம், காஷ்மீருக்குள் நுழைந்து, பாக்., படையினரை விரட்டி அடிக்க முற்பட்டது. பாக்., வீரர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்ததால், இந்தியா இப்பிரச்னையை, ஐ.நா., சபையிடம் எடுத்துச் சென்றது. பல்வேறு கட்ட பேச்சுக்குப் பின், பாக்., ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர். எனினும், காஷ்மீரின், மூன்றில் ஒரு பங்கு பகுதி தங்களுக்கு சொந்தமானது என, வாதிட்டனர். இதையடுத்து ஏற்பட்ட உடன்படிக்கையின் படி, காஷ்மீரில் பாக்., படையினர் அத்துமீறி நுழைந்த ஒரு பகுதி அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் விடப்பட்டது. அதுவே தற்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எனப்படுகிறது.எனினும், 'காஷ்மீர் முழுவதையும் அடையும் வரை, பாகிஸ்தானின் தாகம் அடங்காது' என, அப்போதைய தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இது, காஷ்மீர் பகுதியில் வசிக்கும் பிரிவினைவாதிகள் மனதில் ஆழமாக பதிந்ததால், பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் தோன்றத் துவங்கின. தொடர்ந்து, அங்கிருந்து பயங்கரவாதிகள், காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவுவது தொடர்கதையாகி வருகிறது.
யார் இந்த பிலாவல்?



*பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான, ஜுல்பிகர் அலி புட்டோவின் பேரன்.
*பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான, பெனசிர் புட்டோவுக்கும், முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கும் பிறந்தவர்.
*பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக தற்போது பதவி வகிக்கிறார். கட்சியின் இளம் தலைவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்.

இந்தியா நினைத்தால், பாகிஸ்தானை அழித்துவிடும். அதற்கேற்ற வல்லமை எங்களிடம் உண்டு. ஆனால், நாங்கள் போரை விரும்பாததால், அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. பிலாவலின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது.
சுப்ரமணிய சாமி, பா.ஜ.,

நாட்டின் எல்லையை கண்காணிக்கும் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. எல்லைப் பாதுகாப்பில் முழு கவனம் செலுத்தும் போதிலும், எல்லையை விரிவுபடுத்தும் முயற்சியில் இந்தியா ஒருபோதும் ஈடுபட்டது கிடையாது. பிலாவலின் எண்ணம் கனவிலும் நிறைவேறாது. இது போன்ற பேச்சுக்கள் கண்டனத்திற்குரியவை.
சையது அக்பருதீன்,மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக