வியாழன், 18 செப்டம்பர், 2014

பார்வதி : சினிமாவுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய நான் தயாரில்லை !

சென்னை: மேக் அப் போட்டு சோர்ந்துபோனார் பார்வதி.‘பூ, ‘மரியான், ‘சென்னையில் ஒரு நாள் படங்களில் நடித்திருப்பவர் பார்வதி. அவர் கூறியது:நான் நடிக்கும் ஒரு  படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் அதிக இடைவெளி இருப்பது ஏன் என்கிறார்கள். அதற்கு காரணம் மனதுக்கு பிடித்த வேடங்களை மட்டுமே ஏற்பதுதான். வரும்  படங்கள் எல்லாவற்றையும் நான் ஏற்பதில்லை. ஏற்கும் வேடங்களுக்கு அப்பால் தனிப்பட்ட முறையில் என் எண்ணப்படி வாழ்வதுதான் எனக்கு பிடிக்கும். ஒவ்வொரு  முறை மேக் அப் போடும்போதும் எனது சிகை அலங்காரத்தை சுருளாகவும், வெவ்வேறு நிறத்திற்கும் மாற்ற வேண்டி உள்ளது. இதெல்லாம் எனக்கு சோர்வை  ஏற்படுத்தி விடுகிறது. அதிலிருந்து விலகி இருப்பதற்காக எனது ஹேர் ஸ்டைலை குறைத்து கிராப் வைத்துக்கொண்டேன். கண்ணில் கொஞ்சம் கோளாறு இருப்பதால்  கண்ணாடியும் அணிந்திருக்கிறேன்.சக பெண்களைப்போல் நானும் ஒரு சாதாரண பெண்தான். நடிப்பு எனது தொழிலாக அமைந்துவிட்டது. ஆனால் வாழ்க்கையை என்  இஷ்டப்படித்தான் வாழ்கிறேன். நடிப்பை தவிர எனக்கு சுற்றுபயணம் செல்வதும், எழுதுவதும் பிடிக்கும். மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து அடுத்த படம்  ஒப்புக்கொள்வதற்காக கதை கேட்டு வருகிறேன்.இவ்வாறு பார்வதி கூறினார். -.tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக