காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
காந்திய மக்கள் இயக்கம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறது.
தேசிய ஜனநாயக் கூட்டணி சார்பில் தேர்தலுக்கு பிறகு தோல்விக்கான காரணம்
குறித்தோ அல்லது எதிர்கால தேர்தல் குறித்தோ மக்களிடம் இதுவரை
விளக்கப்படவில்லை.
இவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து
நாங்கள் விலகுகிறோம். மதுவை ஒழிப்பதற்காக வரும் அக்டோபர் 2–ந் தேதி முதல்
கோவையிலிருந்து சென்னை வரை 100 நாட்களுக்கு 100 கிராமங்கள் வழியாக நடைபயணம்
மேற்கொள்ள போகிறோம். மேற்கண்டவாறு தமிழருவி மணியன் கூறினார்.
பேட்டியின் போது கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடும் காந்திய மக்கள் இயக்க வேட்பாளர் டென்னிஸ் கோவில்பிள்ளை உடனிருந்தார். வாயில வந்த மேனிக்கு உதார் அரசியல் விட்டு கடைசில இவ்வளவு சீக்கிரம் அட்ரஸ் இல்லாம போயிடுவார்ன்னு நெனக்கல . ஜெயா ஏதாவது போட்டு தருவார்னு நம்பி கலைஞர் குடும்பத்தை மக்சிமம் தூத்தி பேசியும் ஜெயா ஒரு இழவும் தரல்ல , அட பாஜகவுக்கு எவ்வளவு தூரம் காவடி எடுத்தும் அவுக கூட கண்டுக்கல ! கட்சில வைகோ அல்லது சீமான் கால்ல போய் விழுந்துட வேண்டியதுதான் ஆனா அவிங்களையும் நம்ப முடியாது அவிங்க பவிசு அப்படி ! மாலைமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக