ஜெய்ப்பூர்: பாரதிய ஜனதாவின் கோட்டையாக கருதப்பட்ட ராஜஸ்தானில்
நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி
அடைந்து முதல்வர் வசுந்தரராஜேவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா ஆளும் ராஜஸ்தானில் ராஜஸ்தானில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த
13ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை
இன்று நடைபெற்றது
டைசியாக நடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி
அமோக வெற்றி பெற்றது. சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளில் 162 தொகுதிகளில்
வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
ஆனால் தற்போது நடந்த 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அக்கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ், சுராஜ்கார்க், வீர்
மற்றும் நாஷிராபாத் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த 3 தொகுதிகளுமே
பாஜக வசம் இருந்தவை என்பதால் இந்த தோல்வி முதல்வர் வசுந்தரராஜே
சிந்தியாவுக்கு கடும் அதிர்ச்சி அளித்துள்ளது.
tamil.oneindia.in/
tamil.oneindia.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக