புதன், 17 செப்டம்பர், 2014

குத்தாட்டம் ஆடியதாக சொல்லாதீர்கள் ! இனியாவின் கோபம் நியாயமானதுதான் !

இனியா.கோலிவுட், பாலிவுட் படங்களில் ஒரு பாடலுக்கு டாப் ஹீரோயின்கள் குத்தாட்டம் ஆடுவது இப்போதைய டிரெண்ட். ஸ்ரேயா, ஸ்ருதிஹாசன், பிரியாமணி, பிரியங்கா சோப்ரா என முன்னணி நடிகைகள் குத்தாட்டம் ஆடி உள்ளனர். ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா‘ என்ற படத்தில் இனியா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடி இருக்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது,‘இந்த பாடலை பார்ப்பதற்காக நான் காத்திருக்கிறேன். ஆனால் இதை குத்தாட்டம் என்று சொல்வதை வெறுக்கிறேன். இதை ஸ்பெஷல் நம்பர் என்று அழகாக கூறலாம்.
ஒரு பாடலுக்கு ஆடக் காரணம் இப்படத்தின் இயக்குனர் கண்ணன், ஹீரோ விமல் போன்றவர்கள் எனக்கு நல்ல நண்பர்கள். பாடலை நடிகை லட்சுமி மேனன் பாடி இருக்கிறார். அதனால்தான் ஒப்புக்கொண்டேன். இதுபோல் ஸ்பெஷல் நம்பர் ஆட்டம் ஆட இன்னும் நிறைய ஆசைப்படுகிறேன். அடுத்து சரத்குமார் நடிக்கும் வேளச்சேரி படத்தில் வக்கீலாக நடிக்கிறேன். இவ்வாறு இனியா கூறினார். - See more at: tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக