செவ்வாய், 2 செப்டம்பர், 2014

வித்தியாசமான படங்களை எடுப்பவர்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் !

தெனாலி, பஞ்ச தந்திரம், பரமசிவன், ஏகன் மற்றும் பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகர் ஜெயராம். இவர் 300-க்கும் மேற்பட்ட மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவரின் மகன் காளிதாசன் ‘ஒரு பக்க கதை’ என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகிறார். இவரை நடிகராக அறிமுகப்படுத்தும் விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன், காளிதாசன் குறித்து பேசியதாவது:- காளிதாஸ் என்ற பெயர் சினிமாவில் யாருக்கும் கிடையாது. இந்தப் பெயர் மிக வித்தியாசமான பெயர். ஜெயராம் ஏற்கனவே பிளான் செய்துதான் இப்படி பெயர் வைத்திருக்கிறார். குடும்ப விஷயத்திலும் பிளான் செய்துள்ளார். அதனால்தான் அவருக்கு ஒரு பையன். ஒரு பெண்.


கணேசன் என்ற பெயர் தமிழ் சினிமாவில் பிரபலமான பெயர். அதனால்தான் கணேசன் என்ற பெயரில் வந்து பின்னர் ஜெமினி கணேசன் என்று மாற்ற வேண்டி வந்தது. இவருக்கு அந்த பெயர் மாற்றம் தேவை இல்லை.

இவரை அறிமுகப்படுத்துவது நான் இல்லை. இயக்குனர்தான். நான் சும்மா இவர்தான் ஜெயராம் மகன் காளிதாஸ் என்று சொல்வது மட்டும்தான். இனிமேல் இயக்குனர் மற்றும் காளிதாஸ் கையில்தான் உள்ளது.

டி.என்.ஏ.யில் எனக்கு நம்பிக்கை இல்லை. உழைப்பில்தான் எனக்கு நம்பிக்கை உள்ளது. டி.என்.ஏ. எவ்வளவு பலமாக இருந்தாலும், அதை விரயம் செய்யும் ஊதாரித்தனமான பிள்ளையாக இருந்தால் டி.என்.ஏ. ஒன்றும் செய்யாது. நல்லவேளை காளிதாசுக்கு முன்னாடியே சினிமாவை பற்றி அனுபவம் உள்ளது. எதையும் கண்டு வியக்கமாட்டார்.

சினிமாவில் பணிவை மட்டும் கற்றுக்கொள்ளாதீர்கள். சினிமாத்துறைகளில் இருக்கும் எல்லா கஷ்டங்களையும் கற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ புரிந்தாவது கொள்ளுங்கள். லைட் பாய், தயாரிப்பாளர், புரொடக்சன் நபர் என்ன செய்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஏதாவது புரியாத குழப்பமான இண்டஸ்ட்ரீஸ், பாலிட்டிக்ஸ் அப்படினா என்னிடம் வந்து கேளுங்கள். அது ஜெயராமுக்கு தெரியாது. நான் ரொம்ப பட்டிருக்கிறேன். அதனால் எனக்குத் தெரியும். நல்லவர்கள் சூழ்ந்திருக்கும் உங்கள் வாழ்க்கையில் நல்லதே அமைய வாழ்த்துக்கள்.

வித்தியாசமான படங்களை எடுப்பவர்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். வித்தியாசமாகத்தான் மக்களே பார்க்கிறார்கள். அதற்காகத்தான் நான் நடிக்க வந்தேன். சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்தாலும் புதியவர்களுக்கு வாய்ப்புகள் உண்டு. அந்த வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். maalaimalar.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக