ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க என்ன நடவடிக்கை ? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் ! ட்ராபிக் ராமசாமி மனு ஏற்பு

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக உள்துறை செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!பொது நல சேவகர் டிராபிக் ராமசாமி மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையமும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளனர்.;விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இந்த மனு விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் வைத்தியநாதன், மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக டி.ஜி.பி. மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக