சனி, 13 செப்டம்பர், 2014

விபசார வழக்கில் ஸ்ரீ வித்யா சிக்கவில்லை ! அது தவறான தகவல் !

கடந்த வாரம் நடிகை ஸ்வேதா பாசு ஐதரபாத்தில் உள்ள வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஐதராபாத் நகர் போலீஸார் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையை முடக்கி விட்டனர். இதில் பலரை கைது செய்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு  முன்பு பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக திவ்யா ஸ்ரீ என்ற ஆந்திர நடிகையை ஐதராபாத் போலீஸார் கைது செய்தனர். அப்போது அவரது படம் வெளியாகவில்லை.
இந்நிலையில் நடிகை திவ்யா ஸ்ரீ  என்பதை ஸ்ரீ திவ்யா என்று தவறாக புரிந்து கொண்ட சில இணையதளங்கள் அவரது புகைப்படத்துடன் ஸ்ரீ திவ்யா பாலியல் தொழிலில் ஈடுபட்டு சிக்கியுள்ளதாக செய்தி வெளியிட்டன. சில ஊடகங்களும் இதே போல் செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனைக்கண்டு கடும் அதிர்ச்சியைடந்த ஸ்ரீ திவ்யா, தனது பிஆர்ஓ மூலம் அவசர அவசரமாக மறுப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாலியல் தொழிலில் கைதானது நான் அல்ல. நான் மிகவும் ஓழுக்கமான பெண் இதுபோன்று வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக