திங்கள், 15 செப்டம்பர், 2014

பயங்கரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கும் அரசியல்வாதி யார்?

சென்னை:'பயங்கரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கும், அரசியல் வாதி யார் என்பதை வெளியிட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பான அவரது அறிக்கை:பயங்கரவாதிகளின் சதித் திட்டம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள அருண் செல்வராஜுவிடம், விசாரணை நடத்திய அதிகாரி ஒருவர் கூறும்போது, மும்பையை அடுத்து, சென்னை யில் ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்த, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக, எச்சரிக்கை தகவல்கள் வெளியாகிஉள்ளன. 
இதையொட்டி, தமிழக கடலோரப் பகுதிகள், பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பாதுகாப்பு வளையத்தை முறியடித்த, பாகிஸ்தானின் சதி வேலைகள் தொடங்கிவிட்டன.அதில் ஒரு கட்டமாக, ராணுவ கட்டமைப்புகளின் புகைப்படங்கள் மற்றும் எந்த வழியாக வந்து, அவற்றின் மீது எப்படித் தாக்குதல் நடத்துவது வசதியாக இருக்கும் என்பன போன்ற தகவல்களை வரைபடம் மூலம் திரட்டி, இணையதளம் வாயிலாக, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதராக அதிகாரிகளுக்கு, அருண் செல்வராஜ் அனுப்பிஇருக்கிறார்.மேலும், உளவுக் கும்பலைச் சேர்ந்த, 4 அல்லது 5 பேர், தமிழகத்தில் ஊடுருவி உள்ளனர் என்ற சந்தேகம் உள்ளது என்றும், அதுபற்றி தொடர்ந்து, அருண் செல்வராஜுவிடம் விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணை நடத்திய அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.

செய்தி வந்துள்ளது:

இந்த பயங்கரவாதி, யாரோ ஒரு அரசியல்வாதியுடன் தொடர்பு கொண்டிருந்தான் என்றும் செய்தி வந்துள்ளதால், யார் அந்த அரசியல்வாதி என்பதையும் வெளியிட வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி கூறிஉள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக