ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

லட்சுமி ராயின் காட்சிகளை சுந்தர் சி கட் பண்ணினாரா ? அதாய்ன் டைரக்டர் !


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை; நடிச்ச சீனை கட் பண்ணது ஏன் என்று யாரும் என்னிடம் கேட்கவில்லை என்றார் டைரக்டர் சுந்தர்.சி.சுந்தர்.சி. இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அரண்மனை. இப்படத்தில் வினய், ஹன்சிகா, லட்சுமிராய். ஆண்ட்ரியா நடிக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சுந்தர்.சியும் இப்படத்தில் தலைகாட்டி இருக்கிறார். படத்தில் தான் நடித்த காட்சிகளை குறைத்துவிட்டதாக லட்சுமி ராய் புகார் கூறியதாக தகவல் வெளியானது. இது குறித்து சுந்தர்.சி. கூறியது:இதுவரை காமெடியுடன் கூடிய காதல் கதைகளை இயக்கி வந்தேன். இப்படம் காமெடி பிளஸ் திரில்லர் என்ற புதிய களத்தில் இயக்கி இருக்கிறேன். பொதுவாக பேய் படம் என்றால் ஒரு பங்களாவில் இருக்கும் ஆவி அங்கு வாழ்பவர்களை பாடாய்படுத்தி எடுக்கும்.


அந்த டைப் படம் இல்லை இது. எப்படி அதிலிருந்து மாறுபட்டிருக்கிறது என்பதை படம் பார்க்கும்போது உணர்வீர்கள். இந்த படத்துக்காக 50க்கும் மேற்பட்ட பங்களாக்களை தேடினோம். ஐதராபாத்தில் ஆள் நடமாட்டமில்லாத ஒரு பங்களாவில் ஷூட்டிங் நடந்துள்ளது. இதில் பேயாக நடிப்பது யார் என்பது சஸ்பென்ஸ். இந்த படத்தில் தனது காட்சிகளை குறைத்துவிட்டதாக லட்சுமிராய் கூறியதாக தகவல் வெளிவந்தது. படத்தில் 3 ஹீரோயின்கள் நடித்தாலும் எந்த ஈகோவும் இல்லாமல் நடித்தார்கள். அது மட்டுமல்ல மத்தவங்க சொல்வதுபோல் நான் நடித்த காட்சிகளை ஏன் குறைச்சீங்க என்று என்னிடம் யாரும் கேட்கவில்லை. சொன்னபடி நடித்துக் கொடுத்தார்கள். இவ்வாறு சுந்தர்.சி. கூறினார். - .tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக