செவ்வாய், 30 செப்டம்பர், 2014

பிரியாமணி காதல் வசப்பட்டுவிட்டார் ! விரைவில் அறிவிப்பார் !

சென்னை: பிரியாமணி தனது ரகசிய காதலனின் முதல் எழுத்தை வெளியிட்டார்.‘பருத்திவீரன், ‘மலைக்கோட்டை, ‘தோட்டா, ‘சாருலதா போன்ற படங்களில் நடித்திருப்பவர் பிரியாமணி. கடந்த 2 வருடமாக தமிழ் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். கன்னடம், மலையாள படங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். தமிழ் படங்களில் நடிக்காதது ஏன் என்று அவரிடம் கேட்டபோது,‘மனதுக்கு பிடித்த வேடம் வரவில்லை. அப்படியே வந்தாலும் எல்லாமே கிராமத்து பாணியிலான கதாபாத்திரமே வருகிறது. ஒரே சாயலில் நடிக்க விரும்பாததால் ஒதுங்கி இருக்கிறேன் என்றார். இதற்கிடையில் பிரியாமணி மலையாள நடிகர் பத்ம சூர்யாவை காதலிப்பதாக தகவல் வெளியானது. அதை பிரியாமணி மறுத்தார்.


தனக்கு ஒரு காதலன் இருப்பதாகவும் அவரை சரியான தருணம் வரும்போது தெரிவிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தனது இணைய தள பக்கத்தில் ரோஜாக்கள் நிறைந்த பூங்கொத்து ஒன்றை தனது மனம்கவர்ந்தவருக்கு வழங்குவதுபோல் போட்டோ வெளியிட்டிருக்கிறார். அந்த காதலன் பெயரின் முதல் எழுத்தை ‘எம் என அவர் குறிப்பிட்டிருக்கிறார். இணைய தளத்தில் அவர் வெளியிட்டுள்ள தகவலில் ‘நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு 100 ரோஜாப்பூக்களுடன் சந்திக்க வந்திருக்கிறேன். அந்த நாள் எனக்கு மகிழ்ச்சி தருவதாக அமைந்தது. லவ் யூ எம் என அதில் குறிப்பிட்டிருக்கிறார். பிரியாமணியின் அந்த ரகசிய காதலன் யார் என்று அவரது ரசிகர்கள் மண்டையை போட்டு உடைத்துக் கொண்டிருக்கின்றனர். - See .tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக