திங்கள், 15 செப்டம்பர், 2014

இந்திய கடலில் 58 பொருட்கள் கண்டுபிடிப்பு: மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களா?

கடந்த மார்ச் 8ந் தேதி மலேசிய தலைநகரான கோலாலம்பூரிலிருந்து சீனத்தலைநகரான பீஜிங் நோக்கி சென்ற போது மலேசிய விமானம் மாயமானது.  மாயமான இந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய குழுவினர் தற்போது இந்தியப் பெருங்கடலில் கடினமான 58 பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். கடலில் கண்டுபிடிக்கப்பட்ட பாகங்கள் மாயமான விமானத்திற்கு உடையது தானா என்பதை அறியும் வகையில் அப்பொருட்கள் ஆய்வுக்கு அனுப்பப்படவுள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் லியோ டியாங் லாய் கூறியுள்ளார். இந்த 58 பொருட்களுக்கும் இந்தியப் பெருங்கடலின் கடற்பரப்புக்கும் எவ்வித தொடர்புமில்லை, எனவே தான் இது மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.


இந்தியப்பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியாவின் ஃபர்கோ டிஸ்கவரி ஷிப் நீண்ட காலமாக தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. அதற்கு உதவியாக மலேசியாவின் கோ ஃபீனிக்ஸ் எனும் கப்பலை தேடுதல் வேட்டைக்கு அனுப்ப அரசு முடிவு செய்துள்ளதாக லாய் தெரிவித்துள்ளார். சோனார் சர்வே மூலம் கடலின் ஆழத்தில் நீண்டதூரத்திற்கு வல்லுனர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த ஆய்வில் கடலின் ஆழத்தையும், அதன் தரைப்பரப்பின் அமைப்பு குறித்து தகவல் கிடைத்து வருவதாக ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது. ஒருவழியாக மாயமான விமானம் குறித்த உண்மை நிலவரம் இன்னும் சில தினங்களில் கண்டிப்பாக தெரிய வரும் என ஆஸ்திரேலிய தேடுதல் குழுவினரும், மலேசிய அரசும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக