சனி, 20 செப்டம்பர், 2014

சென்னை விமான நிலையத்தில் 25-வது முறையாக கண்ணாடிகள் உடைந்து விழுந்தது

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதுவரை புதிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் மேற்கூரைகள் 9 தடவை இடிந்து விழுந்தது. அதுபோல் 3 முறை லிப்ட் அறை தடுப்பு இருந்த கற்களும், 12 முறை தடுப்பு கண்ணாடிகளும் இடிந்து விழுந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பங்களில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில் 25 வது முறையாக உள்நாட்டு முனையத்தில் வருகை பகுதியில் நேற்று கதவின் 7 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட கண்ணாடிகள் திடீரென உடைந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் வந்து கண்ணாடிகளை அகற்றினார்கள். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக