புதன், 13 ஆகஸ்ட், 2014

ராபின் வில்லியம்ஸ் க்கு Mrs.Doubtfire கமலஹாசன் அஞ்சலி !

கடந்த சில நாள்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
நகைச்சுவை கலைஞர்கள் அனைவரும் சமூக விமர்சகர்கள்தான். தங்களுடைய கோபத்தை நகைச்சுவை என்ற முகமூடியை வைத்து மறைத்துக் கொள்கின்றனர். அப்படியான வேடிக்கை முகத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்தால் அது மன அழுத்தத்தில் முடியும். நடிகர் ராபின் வில்லியம்ஸின் உண்மையான இயல்பு எளிதாக அழுவது.
திரையில் கூச்சலிடுவதையும் பீதியில் அழுவதையும் செய்த முதல் ஹீரோ ராம்போ. ஆனால் ராபின் வில்லியம்ஸ் திரையில் ஆண்கள் அழுவதற்கான ஒரு கண்ணியத்தை ஏற்படுத்தினார். அப்ப நம்ம சிவாஜிகணேசன் என்னங்கபண்ணினார் ?அங்க  ஒரு  பேச்சு இங்க ஒரு  பேச்சு ?  இப்பவாவது திருட்டு  சிடி பத்தி பேசமுதல்  ராபின்  வில்லியம்ஸ் போன்றாரின்  அற்புத படைப்புக்களை  திருடிய  குற்றத்தை ஒப்புக்கொள்ளுங்க, அதுதான் உண்மையான அஞ்சலி
அவரின் மரணம் தற்கொலை என்பது தெரியவந்தால், அவரது வாழ்க்கை முடியும் முன்பே தன்னை மாய்த்துக் கொண்டதால் நான் அவரை வெறுக்கிறேன். இப்படி வாழ்க்கையிலிருந்து தப்பிக்கும் குணம் கலைஞர்களிடமிருந்து நான் எதிர்பார்க்காத ஒன்று. இது எனது இந்திய சினிமாவின் ஆதர்ச நடிகர் குருதத்துக்கும் பொருந்தும் என கமல் தெரிவித்துள்ளார். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக