திங்கள், 18 ஆகஸ்ட், 2014

Dr.மைத்திரேயன் mp நீக்கம் ! அதிமுக நாடாளுமன்ற பொறுப்புக்களில் இருந்து அதிரடி நீக்கம் ! இவர் ex BJP தமிழக செயலாளர் .

சென்னை: நாடாளுமன்ற அதிமுக பொறுப்பாளர்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் மாநிலங்களவை குழு தலைவரான மைத்ரேயன் அந்த பொறுப்பிலிருந்து மட்டுமல்லாமல், மருத்துவர் அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் நாடாளுமன்ற குழு மாற்றியமைப்பு: அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மைத்ரேயன் நீக்கம் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் "அதிமுக மருத்துவர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து வா. மைத்ரேயன் நீக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலங்களவை அதிமுக குழு தலைவர் பதவியில் இருந்தும் மைத்ரேயன் நீக்கப்பட்டுள்ளார். அச்சு அசல் மயிலாப்பூர் பார்ப்பான் மைத்திரேயன் ஒரு வடகலை அய்யங்கார் , RSS ப்ளஸ் பாஜக  அங்கத்தவராக இருந்தவர் .  விரைவில் மத்திய அமைச்சராக அல்லது மீண்டும் பாஜக தூணாக வேஷம் எடுக்க சான்ஸ் உண்டு .இது ஒரு Preemptive move ஆக இருக்கலாம் !
அவருக்கு பதிலாக நவநீதகிருஷ்ணன் அந்த பதவியை வகிப்பார். அதிமுகவின் நாடாளுமன்ற குழு மாற்றியமைப்பு: அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மைத்ரேயன் நீக்கம் மக்களவை அதிமுக குழுவின் தலைவராக செயல்பட்ட தம்பிதுரை துணை சபாநாயகராக பதவியேற்றுள்ளதால், அவரது இடத்துக்கு டாக்டர் பி.வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக பி.குமார், கொறடாவாக கே.என்.ராமச்சந்திரன், பொருளாளராக ஆர்.வனரோஜா, செயலாளராக கே.காமராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களவையில் துணை தலைவராக முத்துக்கருப்பனும், கொறடாவாக எல்.சசிகலா புஷ்பாவும், பொருளாளராக டாக்டர். ஆர்.லட்சுமணனும், செயலாளராக டி.ரத்தினவேலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக