வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

தமிழில் பதிலளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ! மக்களவையில் முதல் நிகழ்வு

மக்களவையில் முதல் முறையாக தமிழில் கேட்கப்பட்ட கேள்விக்கும், மத்திய அமைச்சர் ஒருவர் தமிழிலேயே பதிலளித்துள்ளார்.
மக்களவையில் அதிமுக உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தமிழில் எழுப்பிய துணைக் கேள்விக்கு மத்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழில் பதிலளிக்க சபாநாயகர் அனுமதியை கோரினார். அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தமிழிலேயே பதிலளித்தார்.
அதிமுக எம்.பி. ராதாகிருஷ்ணன், சீன பட்டாசுகள் ஊடுருவலால் தமிழகத்தில் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக கூறினார். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டி, அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் வினவினார்.
இதற்கு தமிழில் பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், "புரட்சித் தலைவி அம்மா அனுப்பிய கடிதம் கிடைக்கப்பெற்றது. இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். அதற்கு அதிமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். இதைபற்றி முன்பே அழகிரி கோரிக்கை எழுப்பி இருந்தார் ஆனால் அது அப்போது  கவனிக்க படவில்லை  அப்போதைய சபானாயகர் மீரா குமார் அதை அனுமதிக்கவில்லை .

அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழில் பதிலளித்தபோது, அதை அருகில் அமர்ந்து உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிந்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி புன்முறுவலுடன் இருந்தார்.  tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக