மரண தண்டனையை ரத்து செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரென் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மரண
தண்டனையை ரத்து செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. மரண தண்டனைக்கு
வகை செய்யும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 1890யை திருத்தும் ஆலோசனைகள்
ஏதும் அரசிடம் இல்லை.குற்றவியல்
வழக்குகளை விரைந்து விசாரித்து, கால தாமதங்களை தவிர்க்க, குற்றவியல்
நடைமுறைச் சட்டங்களில் வகை செய்யப்பட்டுள்ளது. குறித்த காலத்தில் விசாரணை
நடத்தி, விரைவில் நீதி வழங்கும் வகையில் 2008ம் ஆண்டே சட்ட திருத்தங்கள்
கொண்டுவரப்பட்டுள்ளன என்றார்.தற்கொலை
முயற்சிகளுக்கு தண்டனைகளில் இருந்து விலக்கு அளிப்பது பற்றி குறிப்பிட்ட
அவர், தற்கொலை முயற்சியை குற்றமாக அறிவிக்கும், இந்திய தண்டனை சட்டத்தின்
309வது பிரிவை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்கிறது
என்று தெரிவித்துள்ளார்.ஏற்கனவே
வேதனையில் உள்ள ஒருவரை மீண்டும் தண்டிப்பது மனிதாபமற்ற செயல் என்று சட்ட
ஆணையம் மத்திய அரசுக்கு அறிக்கை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக