ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட தொடங்க வேண்டும் ! சு. சாமி தொடங்கிட்டாரு !

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை மத்திய அரசு வரும் 2016ஆம் ஆண்டுக்குள் தொடங்க வேண்டும்' என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தினார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்.
கோவில் கட்டுமானக் குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியாவை நியமிக்கலாம். அவருடன் வி.கே.சிங் போன்ற மத்திய அமைச்சர் ஒருவரையும் நியமிக்கலாம்.

ராம ஜென்மபூமியில் உள்ள உரிமையைத் திரும்பப் பெறுமாறு பாபர் மசூதியின் பாரம்பரிய மேற்பார்வையாளருக்கு முறைப்படி அந்த அமைச்சர் நோட்டீஸ் அனுப்பலாம்.
அந்த இடத்துக்குப் பதிலாக, சரயூ நதிக்கரையில் புதிதாக மசூதி கட்டிக் கொள்வதற்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.
இதற்காக, சர்வதேச அளவில் முஸ்லிம் தலைவர்களை அழைத்துப் பேச்சு நடத்தி, அவர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
அவ்வாறு ஒப்புதல் பெற முடியவில்லையெனில், நாடாளுமன்றத்தில் சட்டமியற்றி, கோவில் கட்டும் பணியை நிறைவேற்ற வேண்டும் என்று அக்கடிதத்தில் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார் dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக