செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும்: இளைஞரணி முடிவு!

அடுத்த மாதம் 5ம் தேதி, சென்னையில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் மாநில, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அக்கூட்டத்தில், ஸ்டாலினுக்கு, கட்சியின் துணை தலைவர் பதவி வழங்க வேண்டும்; அவரை, முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்; இளைஞர் அணி மாநில செயலர் பதவியை நடிகர் உதயநிதிக்கு வழங்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.தி.மு.க.,வில் உள்ள மற்ற அணிகளை விட, இளைஞரணி முக்கிய அணியாக விளங்கி வருகிறது. ஒன்றிய, நகர, மாவட்ட அளவில், இளைஞரணி நிர்வாகிகளாக பதவி வகித்து, தற்போது 40 முதல் 50 வயது கடந்த பிரமுகர்களை, கட்சியின் மாவட்ட பொறுப்புக்கு கொண்டு வர, ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.  தலைவர் காலத்திற்குள் கட்சியை ஒரு வழி பண்ணி,ஒன்னும் இல்லாமல் ஆக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கின்றனர் தள்ளுபதி கும்பல். சட்ட சபை தேர்தலில் தொடக்கி நாடாளுமற்ற தேர்தல் வரை, கழுதை கட்டெரும்பு ஆனது தான் மிச்சம். இனியும் புத்தி வரவில்லை இந்த கொள்ளை கும்பலுக்கு.
தன் விசுவாசிகளையும், இளைஞரணியில் பணியாற்றிய, அனுபவம் மிக்கவர்களையும், மாவட்ட வாரியாக, பட்டியல் தயாரித்து, அவர்களை கட்சி தேர்தலில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கும் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.இளைஞரணியில் பணியாற்றியவர்களுக்கு, நேரடியாக, ஸ்டாலினிடம் பரிச்சயம் உண்டு என்பதால், கட்சி ரீதியாக அவர்களுக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்பதில், ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். உட்கட்சி தேர்தல் முடிந்த பின், மாவட்ட நிர்வாகிகள் பட்டியலில் பெரும்பாலும், இளைஞர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் இடம் பெறவுள்ளனர்.இதனால், தி.மு.க., இளைஞரணி மாநில செயலர் பதவிக்கு, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு நியமிக்கப்படுவார் என்ற பேச்சு, பலமாக எழுந்துள்ளது.இந்த தகவலை அறிந்திருக்கும் எதிர் கோஷ்டியினர், அவருக்கு, அந்த பொறுப்பை வழங்கக்கூடாது என, எதிர்க்க ஆரம்பித்திருக்கின்றனர்.

ஸ்டாலின் நெருங்கிய நண்பராக விளங்கிய, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., அன்பில் பொய்யாமொழியின் மகன் மகேஷ் பொய்யாமொழி, ஸ்டாலின் மகன் நடிகர் உதயநிதியின் ரசிகர் மன்றத்தின் மாநில தலைவர் பதவியில் இருக்கிறார். கட்சியில் உறுப்பினராகவும் இருக்கும் இவருக்கு, மாநில இளைஞரணி செயலர் பதவியை கொடுக்க வேண்டும் என, கட்சியில் பலர் குரல் எழுப்புகின்றனர்.அதே சமயம், இளைஞரணியை, ஸ்டாலின் உருவாக்கியது என்பதால், அந்த அணிக்கு, அவரது மகன் உதயநிதியைத்தான், மாநில செயலராக நியமிக்க வேண்டும் என, இளைஞரணி மாநில நிர்வாகிகள் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், அடுத்த மாதம் 5ம் தேதி, சென்னையில், ஸ்டாலின் தலைமையில், இளைஞரணி மாநில, மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறஉள்ளது.அக்கூட்டத்தில், கட்சியின் துணைத் தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு வழங்க வேண்டும்; அவரை, முதல்வர் வேட்பாளராக, அறிவிக்க வேண்டும்; இளைஞரணி மாநில செயலர் பதவியை, நடிகர் உதயநிதிக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை, மாவட்ட அமைப்பாளர்கள் வலியுறத்த முடிவு செய்துள்ளனர் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

-நமது நிருபர்- dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக