செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

பாமக பாஜக கூட்டணி ஓவர் ? அதிர்ச்சி ரிபோர்ட் ! தமிழகத்தில் பாஜகவின் திடீர் கவர்ச்சி மங்கிவிட்டது ?

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் இன்று நடந்த தென் சென்னை மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அதன் விவரம் வருமாறு:–
கே:– பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. நீடிக்கிறதா?
ப:– இது பற்றி அவர்களிடமே கேளுங்கள்.
கே:– சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜனதா பா.ம.க. கூட்டணி நீடிக்குமா?
ப:– இதுபற்றி எங்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி முடிவு செய்வோம்.
கே:– மத்தியில் அமைந்துள்ள பா.ஜனதா அரசும் இலங்கை தமிழர் விவகாரத்திலும், மீனவர் விவகாரத்திலும் சரியான நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லையே?
ப:– அது தொடர்பாக பாராளுமன்றத்தில் அன்பு மணி ராமதாஸ் தெளிவாக பேசி இருக்கிறார்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
முன்னதாக பொதுக் குழுவில் ராமதாஸ் பேசியதாவது:–
பா.ம.க. தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை நம்மால் ஏன் ஆட்சிக்கு வரமுடியவில்லை என்பதை கட்சி நிர்வாகிகள் சிந்திக்க வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் நமது ஆட்சி அமைய வேண்டும். அதற்காக திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.

இது வரை ஆண்ட கட்சிகள் எதுவும் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இதை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். இந்த நல்ல தருணத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் 75 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்பவருக்கு 1 சவரன் தங்க மோதிரத்தை நான் பரிசாக வழங்குவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஜமுனா கேசவன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் ராம.கன்னியப்பன் வரவேற்றார். மாவட்ட தலைவர் செல்வராஜ், பகுதி செயலாளர்கள் இரா.சகாதேவன், பழனிச்சாமி, ஆறுமுகம், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.
மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி உள்பட பலர் பேசினார்கள். மாநில துணைத்தலைவர் ஈகை தயாளன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் மாம்பலம் வினோத் நாடார், அமைப்பு செயலாளர் ஜெயராமன், அடையாறு வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறதா? என்பதை பா.ஜ.க. தெளிவுபடுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.பா.ம.க. தலைவரும் தருமபுரி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”கடந்த ஆண்டு தமிழகத்தில் மதுவிற்பனையின் மூலம் அரசுக்கு ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், தமிழக அரசு கடைகளை மூட நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் பெருகிவிட்டன. தினசரி கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகின்றன.
தமிழக மீனவர்களை இலங்கை அதிகாரிகள் தாக்கினால், தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டார்கள் என்கின்றனர். ஆனால், குஜராத்தில் மீனவர்கள் தாக்கப்பட்டால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டனர் எனக் கூறுகிறார்கள். ஏன் இந்த முரண்பாடு? மீனவர்கள் பிரச்னை தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் நேரில் சந்தித்துப் பேசியுள்ளேன்.இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் செய்ததையே பா.ஜ.க. அரசும் செய்கிறது. ஐக்கிய நாடுகள் குழுவுக்கு இந்தியா விசா மறுத்தது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் அமைக்கப்பட்ட பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறதா? என்பதை பா.ஜ.க. தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக