ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

தஸ்லீமா நஸ்ஸிரின் விசாவை நீடிக்க தாமதம் ஏன் ? ராஜ்நாத்சிங் தஸ்லிமா பேச்சுவார்த்தை !

இந்தியாவில் ஓராண்டு தங்குவதற்கு விசா மறுக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த, சர்ச்சைக்குரிய வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற அந்தச் சந்திப்புக்குப் பிறகு, தஸ்லிமா நஸ்ரீன் தனது டுவிட்டர் இணையதளப் பக்கத்தில், "உங்கள் துயர நாள்கள் முடிவுக்கு வரும் என ராஜ்நாத் சிங் கூறினார்' என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஓராண்டு காலம் தங்குவதற்கு அனுமதி கேட்டு உள்துறை அமைச்சகத்திடம் தஸ்லிமா நஸ்ரீன் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவர் இரண்டு மாதம் மட்டும் தங்குவதற்கு விசா வழங்கப்பட்டது.
இதுகுறித்து, உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், "தஸ்லிமாவின் விசா மனுவை சரிபார்க்கும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. அதுபற்றி முடிவு எடுப்பதற்கு கால தாமதமாவதால், அவருக்கு இரண்டு மாத விசா வழங்கப்பட்டுள்ளது' என்றார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலையடுத்து, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா ஆகிய நாடுகளில் வசித்து வருகிறார். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக