வியாழன், 7 ஆகஸ்ட், 2014

திமுக அமைப்பு செயலாளர் கல்யாணசுந்தரம் பதவிநீக்கம் !

சென்னை: தி.மு.க.வின் அமைப்பு செயலாளராக இருந்த கல்யாணசுந்தரம் திடீர் என தனது கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், கட்சி தலைமைக்கு கல்யாணசுந்தரம் ஒரு கடிதமும் அனுப்பி உள்ளார். இந்த கடிதத்தில் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ள கல்யாணசுந்தரம், கனிமொழி, ராசா மற்றும் தயாநிதி ஆகியோரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கல்யாணசுந்தரம் தீவிர ஸ்டாலின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மு.க., அழகிரியை கட்சிக்குள் கொண்டு வர மேலிடம் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக கட்சிக்குள் காய் நகர்த்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. dinamalar.com அப்பாடா ஒரு மாதிரி திமுக சரியானபாதையில் பயணிக்க தொடங்கி இருக்கிறது , 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக