வியாழன், 7 ஆகஸ்ட், 2014

விநாயகர் சதுர்த்திக்கு ஐந்து படங்கள் ரிலீஸ் ! பிள்ளையார் அப்பா போட்ட காசை கடலுக்க போட்டிடாதை அப்பா !

விநாயகர் சதுர்த்திக்கு 5 படங்கள் ரிலீஸ் ஆகிறது.தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு விழா நாட்களை குறிவைத்து தமிழ் படங்கள் அதிக எண்ணிக்கையில் ரிலீஸ் ஆகும். அந்த பட்டியலில் தற்போது விநாயகர் சதுர்த்தி பண்டிகையும் இணைந்திருக்கிறது. வரும் 29ம் தேதி இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழில் 5 படங்கள் வெளியிட தயாராகி வருகின்றன. கடந்த ஆண்டு இதேநாளில் சிவ கார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெளியாகி வெற்றி பெற்றது. அந்த சென்டிமென்ட் கோலிவுட்காரர்களை ஈர்த்திருக்கிறது. ஜெயம் ரவி நடித்துள்ள ‘பூலோகம், கார்த்தி நடித்துள்ள ‘மெட்ராஸ், விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ‘சலீம், அதர்வா நடிக்கும் ‘இரும்பு குதிரை, பார்த்திபன் இயக்கும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘ ஆகிய படங்கள் இந்த பட்டியலில் உள்ளது. இவற்றில் 2 படங்கள் ஏற்கனவே சென்சார் ஆகிவிட்டது. இதற்கிடையில் ஆகஸ்ட் 15ம் தேதி சூர்யா நடித்துள்ள ‘அஞ்சான் படம் திரைக்கு வருகிறது. - .tamilmurasu.org/I

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக