புதன், 6 ஆகஸ்ட், 2014

அடுத்த சிலுக்கு நம்ப அஞ்சலியாமே ?இயக்குனர் கருத்து !

நடிகை அஞ்சலிதான் அடுத்த சில்க் ஸ்மிதா என்று பேசி தெலுங்கு பட இயக்குனர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னனி நடிகையாக இருந்த நடிகை அஞ்சலி சமீபகாலங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார்...சூர்யாவின் ‘சிங்கம்.2’ படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்ட அவர், தற்போது தெலுங்கு படமான ‘கீதாஞ்சலியில் மிகவும் கவர்ச்சியாக நடத்துள்ளார். ஜெயம் ரவியுடன் பெயரிடப்பட்டாத படம் ஒன்றிலும் நடித்துவரும் அஞ்சலி இதிலும் கவர்ச்சியாகவே நடிக்கிறாராம்.  இந்நிலையில் கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கையை படமாக்க முயற்சிகள் நடந்து வரும் நிலையில் கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அஞ்சலி ஷகிலா வேடத்தில்  நடிக்கப் போவதாக இணையத்தில் செய்திகள் உலாவின. இந்நிலையில். அஞ்சலி தான் அடுத்த சில்க்ஸ்மிதா என தெலுங்கு பட இயக்குனர் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் நடிகை அஞ்சலி கலந்து கொண்டார். அவ்விழாவில் பிரபல இயக்குனர் ஒருவர் பங்கேற்று பேசுகையில் ‘‘அஞ்சலி மறைந்த நடிகை சில்க்ஸ்மிதாவை போல் கவர்ச்சியாக இருக்கிறார். சிங்கம்–2 படத்தில் அஞ்சலி ஆடிய குத்தாட்டம் பிரமாதமாக இருந்தது. அஞ்சலி மட்டும் குத்தாட்ட நடிகையாக மாறினால் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம்’’ என்றார். இதனை கேட்ட அதிர்ச்சி அடைந்த அஞ்சலி,  கோபத்துடன் விழாவில் இருந்து வெளியேறிவிட்டாராம். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக