செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

அத்வானி-முரளி மனோகர் ஜோஷி பா.ஜ.க. ஆட்சிமன்ற குழுவிலிருந்து நீக்கம் !

பா.ஜ.க.வில் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதிலிருந்து அதிருப்தியடைந்த எல்.கே. அத்வானி கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியிருந்தார். ஆனால் கட்சி நடவடிக்கைளில் இருந்து அவர் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் பா.ஜனதா கட்சியின் முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும் ஆட்சிமன்றக் குழுவிலிருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பா.ஜ.க மூத்த தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்  நமக்கென்னவோ  இது ரஷ்யாவில் லெனினுக்கு பின்பு வந்த ஸ்டாலின் பெரியவர்கள் எல்லோரையும் களையெடுத்து ஒருவளிப்பண்ணி தான் ஒரு கொடிய சர்வாதிகாரியானது மாதிரி தான் மோடி அமித் ஷா கும்பலின் போக்கு இருக்கிறது இதுதாண்டா மோடி  பாஜக  ,maalaimalar.cm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக