சனி, 23 ஆகஸ்ட், 2014

லஞ்சம் கொடுத்து அஞ்சான் பெற்ற யு சான்றிதழ் ! ஐ பேட் , லேப்டாப் மற்றும் பணம் !

CBI claimed that the CEO received a “Lenovo laptop and an Apple i-pad” on August 1 for arranging the screening of Tamil film Anjaan at Infinity mall. “The movie was examined on July 30, 2014 and subsequently censor certificate was issued on August 5, 2014,” the CBI plea read. Kumar also received illegal gratification of Rs 50,000 for screening the movie on August 9, it alleged.
மும்பை: 'அஞ்சான்' படத்துக்கு சான்றிதழ் வழங்க மடிக்கணினி மற்றும் ஐ-பேடு ஆகியவற்றை மத்திய சினிமா தணிக்கை வாரிய தலைவர் ராகேஷ் குமார் லாஞ்சம் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை சி.பி.ஐ. அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மத்திய சினிமா தணிக்கை வாரிய ஆலோசனை குழு உறுப்பினர் சர்வேஷ் ஜெய்ஸ்வால் மற்றும் ஏஜெண்டு ஸ்ரீபதி மிஸ்ரா ஆகியோரை கடந்த 14ஆம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்திய சினிமா படங்களுக்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக மத்திய சினிமா தணிக்கை வாரிய தலைவர் ராகேஷ்குமார் கடந்த 18ஆம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.  நடிகர் அர்ஜுனுக்கு அடுத்த படி இந்தியாவை காப்பாத்துரவர்  நடிகர் சூர்யாவுங்கோ , லஞ்சம் கேட்கிறவனை அடிச்சு துவைச்சு  அப்படீயே சான்றிதழை பறிச்சுப்பீங்கன்னு பார்த்தாக்க லேப்டாப் எல்லாம் கொடுத்து அமர்கள படுதிட்டீக ! அப்படீயே லஞ்சம் கொடுத்து  இந்தியாவை வல்லரசாக்கிடுங்கோ! செஞ்சாலும் செய்சுடுவீங்கடா  ?

கைது செய்யப்பட்ட 3 பேரையும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரித்து வந்தனர். வெள்ளிக்கிழமையன்று அவர்கள் மும்பை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது நீதிபதிகள் முன்னிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகையில், தமிழில் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘அஞ்சான்' படம் தணிக்கைக்காக கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி அவரிடம் அனுப்பி வைக்கப்பட்டது.
அவர் 6 நாட்கள் இருப்பில் வைத்து அதன்பின்னர்தான் அந்த படத்தை பார்த்துள்ளனர். இவ்வாறு நடைமுறைகளை முடித்த பின்னர் கடந்த 5ஆம் தேதி அஞ்சான் படத்துக்கு சான்றிதழ் வழங்கி இருக்கிறார்.
அஞ்சான்' படத்துக்கு சான்றிதழ் வழங்க ராகேஷ் குமார் ஒரு மடிக்கணினி மற்றும் ஐ-பேட் லஞ்சமாக வாங்கி இருக்கிறார்.
தெலுங்கு படத்திற்கு ரூ.50000 இது தவிர கடந்த 9ஆம் தேதி ‘சிக்கந்தர்' என்ற தெலுங்கு படத்துக்கு சான்றிதழ் வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்று இருக்கிறார்" என்று தெரிவித்தனர்.
/tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக