திங்கள், 18 ஆகஸ்ட், 2014

திட்டக்குழுவை கலைப்பது ஏன் ? அரசியல்வாதிகளின் கல்லாவை மேலும் நிரப்ப ஒரு மாற்றம் ?

புதிய பிரதமரின் முதலாவது சுதந்திர தின பேச்சில் உள்ள முக்கிய பொருளாதார கொள்கைகளில் ஒன்று மத்திய திட்டக் குழுவை கலைத்து அதற்கு பதில் ஆலோசனைக் குழு ஒன்றை ஏற்படுத்துவதாகும். திட்டக்குழுவை அதிகாரத்தை மையப்படுத்தும் ஓர் அமைப்பாக மாநில அரசுகள் பார்க்க; மத்திய அமைச்சகங்களோ தங்களின் அதிகாரத்தில் திட்டக்குழு தலையிடுகிறது என்று நினைக்க; இன்று அதன் மூடுவிழாவுக்கு வந்துள்ளோம்.
சந்தை பொருளாதாரத்தில், அரசின் பொருளாதார செயல் பாடுகள் குறையும்போது, திட்டக்குழுவின் அவசியமும் குறைந்துள்ளது என்ற பொருளாதார சிந்தனை வலுப்பெற்றுள்ளதும் இதற்கு முக்கிய காரணம்.
சுதந்திரத்துக்கு முன்பே திட்டமிட்ட பொருளாதாரத்தை அமைக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய் தது. இதனை தொடர்ந்து, இந்திய தொழிலதிபர்களும் ‘பாம்பே திட்டம்' (Bombay Plan) என்று ஒன்றை 1945-ம் ஆண்டு உருவாக்கினர். ஆனால், மத்திய அரசின் நிதியை மாநிலங் களுக்கிடையே பகிர்ந்தளிக்க ‘நிதிக் குழு' உருவாக்கிய இந்திய அரசியல் சட்டம், ‘திட்டக் குழுவை' உருவாக்கவில்லை. அரசிய சட்டம் நிறைவேறிய பிறகு, ‘திட்டக் குழு' ஒரு செயல்முறை அமைப்பாகத்தான் உருவாக்கப்பட்டது. நேர்மை நியாயத்தை பத்தியெல்லாம் பாடம் எடுக்கும் குருமூர்த்தி சோ  போன்ற சொம்பு வாத்தியாரெல்லாம் எங்க ஒழிச்சிருக்கிராயங்க ? மவுன விரதம்னா அப்படி ஒரு மவுன விரதம் !

திட்டக்குழுவின் தேவை
1950களில் இயற்கை வளங்களை அரசே பயன்படுத்தி தொழிற்சாலைகளை உருவாக்க, நீர்த்தேக்கங்கள், பாசன வசதிகளை உருவாக்க திட்டமிடல் அவசியமாக இருந்தது. இன்று தொழில் துறை முழுவதும் தனியார் துறைக்கு வந்த பிறகு, தொழில் துறையை ஒழுங்குபடுத்தும் ஒழுங்குமுறை ஆணையங்கள் இருந்தால் போதும், திட்டக்குழு தேவை இல்லைதான். இருந்தாலும், இன்றும் பெரிய நீர்ப்பாசன வசதிகள் அரசிடமே உள்ளன. பாசனவசதியை மேம்படுத்துவதில் இன்றும் அரசுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது, அதனை சரியான திட்டமிடல் மூலமே நடத்தமுடியும்.
1970கள் வரை, அரசு பெரிய திட்டங்களையும், அதற்கான முதலீடுகளையும் செய்தால் மட்டும் போதும், அதன் செயல்பாடு ஏழ்மையை தானாகவே குறைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை. அதனால் நேரடியான வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல் படுத்தவும், திட்டங்களின் குறை களை நீக்கி, காலத்திற்கு ஏற்ப மாற்றவும் திட்டக்குழு போன்ற ஓர் அமைப்புக்கு தேவை இருந்தது.
இன்றுவரை நூறு நாள் வேலை உறுதி திட்டம் முதல், எல்ேலாருக்கும் கல்வி, கிராம சுகாதாரத்திட்டம், உணவு பாதுகாப்பு திட்டங்கள் வரை அவற்றின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து மாற்றங்களை செய்ய திட்டக்குழு தேவை.
உற்பத்தியை பெருக்குவதற்கு நிறைய வாய்ப்புகளும் வழிமுறை களும் உள்ளன; உற்பத்தியை அனைவருக்கும் தேவைப் படுகின்ற அளவில் பகிர்ந்தளிக்க அரசு செயல்திட்டங்கள் தேவை. இந்த வருமான மறு பகிர்வு செயல்திட்டங்கள் உருவாக்க, செயல்பாட்டில் உள்ள குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்ய திட்டக்குழு அவசியம். எனவே, திட்டக்குழு போன்ற அமைப்புதான் ‘சமூக நலத் திட்டங்களை' உருவாக்கி செயல்படுத்தும் என்ற முறை வரவேண்டும்.
அதிகார மையப்படுத்துதலும், திட்டக்குழுவும்
திட்டக்குழு என்பதே அதிகா ரத்தை மையப்படுத்தும் ஓர் அமைப்புதான் என்ற குற்றச்சாட்டு ஆரம்பம் முதலே இருந்து வருகிறது. பல சந்தர்ப்பங்களில் மத்திய அமைச்சர்களே திட்டக் குழு தங்கள் செயல்பாடுகளில் தலையிடுவதாக குற்றம் சாட்டினர். புதிய பொருளாதாரக் கொள்கை செயல்பாட்டுக்கு வந்த பிறகு பல அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த பொதுத்துறை-தனியார் துறை-கூட்டு முயற்சிகள் (Public- Private-Partnership PPP) உருவாக்கப்பட்டன. இது தொடர்பாக மத்திய திட்டக்குழு நடைமுறை கட்டுப்பாடுகளை உருவாக்கின. இந்த செயல்முறை கட்டுப்பாடுகள், திட்டங்களை விரைவாக செயல்படுத்த தடை யாக உள்ளன என்று தரைவழி போக்குவரத்து, விவசாயம், நீர்பாசனம் போன்ற துறைகளின் அமைச்சர்கள் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் எல்லா மாநில முதலமைச்சர்களும் திட்டக் குழுவின் துணைத் தலைவரை சந்தித்து திட்டச் செலவுக்கான நிதியை பெறுகின்ற முறை உள்ளது. இதனை எதிர்த்து வரும் முதலமைச்சர்களுக்கு திட்டக்குழுவை மூடும் அறிவிப்பு ஏற்புடையதாக இருக்கும். ஆனால், இனிமேல் மத்திய நிதியை பெற ஒவ்வொரு அமைச்சகத்தையும் தனித்தனியே சந்திக்கவேண்டிய அவசியம் வரலாம் என்பதை நினைக்கும்போது திட்டக்குழுவே பரவாயில்லை என்ற நிலை உள்ளது.
இவ்வாறு, மத்திய அமைச் சர்களும், மாநில முதலமைச் சர்களும் தங்களின் அதிகாரத் தை திட்டக்குழு எடுத்துக் கொண்டுவிட்டது என்று கூறி வருகின்றனர். அதே நேரத்தில் பலவழிகளில் திட்டக்குழுவின் செயல்பாடுகள் மாற்றம் பெற்றுள்ளன. இந்த மாற்றங் களை தொடர்ந்து செய்து, திட்டக்குழுவை ஒரு ஏற்புடைய அமைப்பாக மாற்றுவதற்கு பதில், அதனை மூடுவதால், அமைச்சர்களின் அதிகாரத்தை பெருக்குவதற்கான வழி உண்டாக்கப்பட்டுள்ளது. இதுவும் ஓர் அதிகார மையப்படுத்தும் முயற்சியாகத்தான் பார்க்க வேண்டும்.
நிதி பகிர்வு இனி எப்படி நடக்கும்?
மாநிலங்களுக்கிடையே நிதி பகிர்வு செய்வது, மத்திய திட்டத்தை செயல்படுத்த மாநிலங்களுக்கு நிதி கொடுப் பது போன்றவை எல்லாம் திட்டக்குழுவின் வரம்பு மீறிய செயல் என்ற விமர்சனம் உண்டு. மாநில திட்டங்களுக்காக காட்கில்-முகர்ஜி கணக்கு முறையை பயன்படுத்திதான் நிதி கொடுக்கப்படுகிறது. பல மத்திய திட்டங்களை செயல்படுத்த இப்பொது மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட் டுள்ளன. இதே திசையில் மேலும் பல நடவடிக்கைகள் தேவை.
மாநில அரசுகளின் திட்டச்செல வுகளுக்காக காட்கில்-முகர்ஜி கணக்கு முறைமூலம் அளிக்கப் படும் திட்டக் கொடை (plan grant) இனிமேல் யாரால் நிர்ணயிக்கப்படும்? என்ற கேள்வி எழுகிறது. இனிமேல் ஐந்தாண்டு திட்டங்களோ அல்லது ஆண்டுத் திட்டங்களோ இல்லாத நிலையில், திட்டக் கொடைக்காக ஒதுக்கப்பட்ட தொகையை 'நிதிக் குழுவின்' பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கலாம். இவ்வாறு செய்ய மத்திய அரசு முன்வருமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மாறாக, திட்டக்குழு இல்லாமலே ஒவ்வொரு அமைச் சகமும் தன்னிச்சையாக திட்டங் களை உருவாக்கி செயல் படுத்தலாம். அந்தத்திட்டங்களை மாநில அரசுகள் மூலமாகவே செயல்படுத்தமுடியும். இது திட்டச்செலவை பகிர்ந்தளிப்பதில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இது ஒருபுறம் இருக்க, ஏற்கனவே பதினான்காவது நிதிக் குழு முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி.ரெட்டி தலைமையில் அமைக்கப் பட்டுவிட்டது. இந்த குழுவுக்கு கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு விதிகளில் ஒன்று, மாநிலங்களின் திட்டம் சாராத செலவுகளுக்கு வழங்க வேண்டிய கொடை அளவை நிர்ணயிப்பதாகும். இப்போது திட்ட செலவுகளே இல்லாதபட்சத்தில், அரசின் எல்லாச் செலவுகளும் திட்டம் சாராத செலவுகள் தான். அனைத்து செலவுகளும் திட்டம் சாராத செலவுகள் எனில் எப்படி நிதியை பகிர்ந்தளிப்பார்கள். இனி, நிதி குழுவின் வழிகாட்டு விதிகளை மாற்றம் செய்யவேண்டும்.
மேலும், மத்திய அரசின் செலவுகளை கணக்கு வைக்கும் முறையிலும், திட்டச் செலவுகள், திட்டம் சாராத செலவுகள் என்ற பிரிவினை உள்ளது, இவற்றிலும் மாற்றம் செய்யவேண்டும்.
கூட்டாட்சி அமைப்பில் தேவை யற்ற அதிகார அமைப்பாக பார்க்கப்பட்ட திட்டக்குழுவைக் கலைப்பதன் மூலம், அமைச்சகங்களிலும், மாநில முதலமைச்சர்களிடமும் அதிகாரங்களை குவிக்கும் ஒரு முயற்சியாகவே இது தெரிகிறது. இதனால், ஒருங்கிணைத்த பொருளாதார திட்டத்தை உருவாக்கவும், அரசின் செயல்பாடுகளை அதன் அருகிலிருந்து விமர்சிக்கவும் வழிகோலிய ஓர் அமைப்பை இழக்கப்போகிறோம்.
seenu242@gmail.com tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக