நட்வர் சிங்கிடம் உள்ளதை விட அதிக அளவிலான விவரங்கள், தகவல்கள்,
ரகசியங்கள் எனது அப்பாவின் டைரிகளில் உள்ளன. ஆனால் என் அப்பா அவரைப் போல
நடந்து கொள்ள மாட்டார். நம்பிக்கைத் துரோகம் சரியல்ல என்று குடியரசுத்
தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா கூறியுள்ளார்.
மறைந்த ராஜீவ் காந்தி குறித்தும், அவரது மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல்
காந்தி குறித்தும் பல்வேறு பரபரப்புத் தகவல்களை வெளியிட்டு பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளார் நட்வர்சிங். இது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இதற்குப்
பதிலடியாக தானும் சுயசரிதை எழுதி உண்மைகளை வெளியிடப் போவதாக சோனியா காந்தி
கூறியுள்ளார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இன்னொரு முன்னாள் முக்கிய காங்கிரஸ்
தலைவரும், குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா
கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனது தந்தை, முன்னாள் அமைச்சர் நட்வர் சிங் மாதிரி நடந்து கொள்ள
மாட்டார். அவர் காங்கிரஸில் இருந்தபோதும், அரசில் இருந்தபோதும் நடந்ததை
வெளியில் சொல்ல மாட்டார்
கடந்த 40 வருடமாக எழுதி
வருகிறார். அவரிடம் பல பரபரப்பான, ரகசியமான, முக்கியமான தகவல்கள் உள்ளன.
நட்வரிடம் உள்ளதை விட அதிகமாகவே உள்ளது.
அவை அனைத்தும் என்னிடம் பத்திரமாக உள்ளது. ஆனால் அதில் உள்ள சில
முக்கியமான தகவல்களை யாரும் படித்து விடாதபடி அழித்து வைத்துள்ளார்.
சிலதனிப்பட்ட விஷயங்கள் யாருக்கும் தெரியாமல் இருப்பதுதான் நல்லது என்றும்
அவர் கூறியுள்ளார்
யாருமே நம்பிக்கைத் துரோகம் செய்யக் கூடாது. அதுதான் எனது கருத்து என்றார் ஷர்மிஷ்தா
/tamil.oneindia.in/
/tamil.oneindia.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக