வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல்:

ஈராக்கில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ராணுவத்திற்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். அங்கு எர்பில் நகர் உட்பட பல்வேறு நகரங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் கலவரத்தில் ஈடுபட்டுள்ள தீவிரவாதிகளின் மீது தாக்குதல் நடத்துமாறு அமெரிக்க ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்..
இது குறித்து அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அமெரி்க்கா கண்ணை மூடிக்கொண்டு இருக்காது எனவும், சிறுபான்மையினரை காப்பாற்ற தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். .இதனையடுத்து ஈராக்கி்ன் எர்பில் நகரில் அமெரிக்காவின் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளன.dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக