வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

கோட்டை கொத்தளத்தில் இன்று கொடியேற்றுகிறார் ஜெயலலிதா

நாட்டின் 68-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.
கொடியேற்றுவதற்கு முன்னதாக, சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
அவரது சுதந்திர தின உரையில், மாநில அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.
அதன்பிறகு, துணிச்சலான செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல்-ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த சேவை விருது உள்ளிட்ட விருதுகளை அவர் வழங்குகிறார்.கூடவே  வாய்தா வாங்கிய சாதனைக்கும் ஏதாவது விருது வழங்கினால்  தேவல ?

சுதந்திர தின விழாவுக்காக கோட்டைக்கு எதிரே பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் அமைச்சர்கள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், முப்படைகளின் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
தலைமைச் செயலகத்தின் எதிரே ராஜாஜி சாலையில் நடைபெறும் சுதந்திர தின விழாவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைமைச் செயலக பகுதியில் ஒரு கூடுதல் ஆணையர், 4 இணை ஆணையர்கள், 9 துணை ஆணையர்கள் தலைமையில் சுமார் 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக