ஹரிஸ்
கல்யாண்-ஆனந்தி நடிக்கும் படம் ‘பொறியாளன். டைரக்ஷன் தாணுகுமார்.
தயாரிப்பு வெற்றிமாறன், வெற்றிவேலவன், எம்.தேவராஜுலு. மணிமாறன் கதை. ஜோன்ஸ்
இசை. இப்படம் தயாரித்தது குறித்து டைரக்டர் வெற்றிமாறன் கூறியது:ஒரு
பொறியாளனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை எளிமையாகவும்,
யதார்த்தமாகவும் சொல்லும் இக்கதையை கேட்டவுடன் பிடித்திருந்தது.
எப்படியாவது இதில் எனது பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காக அதை
தயாரிக்கும் பொறுப்பை ஏற்றேன். இதில் சினிமாவுக்காக எப்படி வேண்டுமானாலும்
காட்சிகளை அமைத்துக்கொள்ளும் சூழல் இருந்தது. ஆனால் அதுபோல் எதுவும்
செய்யாமல் யதார்த்தமாகவே காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. எளிமையாக
இருப்பது சுலபமான விஷயம் அல்ல. ஒரு படம் பெரிய படம் என்பது அதிக
பட்ஜெட்டில் எடுப்பது அல்ல. அப்படத்தின் கரு எப்படி இருக்கிறது என்பதை
பொறுத்தே பெரியபடம், சிறிய படம் என்று முடிவு செய்யப்படுகிறது.
இப்போதெல்லாம் 3 நாள் படம் ஓடினால் கலெக்ஷன் வந்துவிடும் என்கிறார்கள். 2
வாரம் ஓடினால் அந்த படம் சூப்பர் ஹிட் என்கிறார்கள். இப்படம் வெற்றி படமாக
அமையும்.இவ்வாறு வெற்றிமாறன் கூறினார் - See more at:
.tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக