புதன், 27 ஆகஸ்ட், 2014

மார்ச் மாதத்துக்குள் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் தீர்ப்பு? ஆ.ராசா !


அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு குற்றச்சாட்டில் திமுகவின் மீதான களங்கம் நீங்கும் என முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சரும், திமுக கொள்கை பரப்புச் செயலருமான ஆ.ராசா தெரிவித்தார்.
உதகை நகர திமுக சார்பில் உதகையில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட திமுக கொடியேற்று விழாவில் பங்கேற்ற ஆ.ராசா, நிருபர்களிடம் கூறியது:
கடந்த மக்களவைத் தேர்தலின்போது, மோடி அலை வீசியதால், பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காததும், காங்கிரஸ் கட்சிக்கு எதிரானதாக அமைந்துவிட்டது.
எனவே, கடந்த தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி உருவாகி இருந்தாலும், இதே தோல்விதான் ஏற்பட்டிருக்கும். ஆனால், நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியிட்டிருந்தால், நான் கண்டிப்பாக வெற்றி பெற்றிருப்பேன். எனக்கு எதிராக சதி செய்யப்பட்டுவிட்டது.
அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் தீர்ப்பும் வெளியாகிவிடும். இதன் மூலமாக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு குற்றச்சாட்டில் திமுகவின் மீதான களங்கம் நீங்கும்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலை திமுக குற்றச்சாட்டுகளின்றி எதிர்கொள்ளும். அப்போது தேர்தல் முடிவுகளும் மாறிவிடும் என்றார் dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக