வியாழன், 7 ஆகஸ்ட், 2014

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவர் உட்பட 29 பேரின் கருணை மனுக்களை நிராகரிப்பு. !

மகாராஷ்டிரத்தில் 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த பிரஹலாத்ராவ் வாஸ்னிக் என்ற நபரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.
மத்திய உள்துறையின் ஆலோசனையை ஏற்று, வாஸ்னிக்கின் கருணை மனுவை கடந்த மாதம் 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.

குடியரசுத் தலைவராகப் பதவியேற்றதில் இருந்து பிரணாப் முகர்ஜி கடந்த 2 ஆண்டு பதவிக் காலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 22 வழக்குகளில், வாஸ்னிக்குடன் சேர்த்து, 29 பேரின் கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். ஒரு மனுவின் மீது மட்டும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளார். கருணை மனு நிராகரிக்கப்பட்டவர்களில் மும்பை தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளி அஜ்மல் கசாப், நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அஃப்சல் குரு ஆகியோரும் அடங்குவர்.dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக